ராமரை நம்புகிறோம்: மோடியை நம்பவில்லை: கபில்சிபல் விளக்கம்

பதிவு செய்த நாள் : 08 டிசம்பர் 2017 07:55


புதுடில்லி:

கடவுள் ராமரை நம்புகிறோம். ஆனால் மோடியை நம்பவில்லை என்று பிரபல வழக்கறிஞர் கபில்சிபல் கூறிஉள்ளார்.

அயோத்தி சர்ச்சைக்குரிய இடம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசார ணைக்கு வந்தபோது, பிரபல வழக்கறிஞர் கபில் சிபல் சன்னிவக்பு வாரியத்தின் சார்பில் ஆஜரானார். அப்போது அவர் கூறுகையில், 2019 மக்களவைத் தேர்தல் வரை இந்த வழக்கின் விசாரணையை தள்ளிவைக்கவேண்டும்என்றார். இது தற்போது சர்ச்சை ஆகி உள்ளது.

தேர்தலுடன் அயோத்தி விவகாரத்தை இணைத்து அரசியல் ஆக்குவது காங்கிரஸ்தான். இதில் காங்கிரசின்நிலைப்பாடு என்ன என்று பிரத மர் மோடி கேள்வி எழுப்பி இருந்தார்.கபில்சிபல் வழக்கறிஞர் என்றாலும் முன்னாள் சட்ட மந்திரி. எனவே இதை காங்கிரசின் கருத்தாக எடுத்துக் கொள்ளலாமா என்று பா.ஜனதா தலைவர்கள் கேள்வி எழுப்பி இருந்தனர். கபில்சிபலின் சொந்த கருத்து என்று சன்னி முஸ்லிம் வாரியத்தின் உறுப்பினர் ஹாஜி மெகபூப் கூறியிருந்தார்.

இப்படி சர்ச்சை கிளம்பிய நிலையில் இது பற்றி கபில்சிபல் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:

பிரதமர் மோடியை, உண்மையான இந்து அல்ல என்று நான் கூறியதால், கோர்ட்டில் நான் கூறியதை பிரதமரும், பா.ஜனதா கட்சியும் சர்ச்சை ஆக்கி வருகிறது. அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது என்பது பிரதமர் விரும்பினால் மட்டும் நடக்கக்கூடியது அல்ல. அதை கடவு-ள் ராமர் விரும்பினால்தான் கட்டப்படும். கடவுளை நாங்கள் நம்புகிறோம்.ஆனால் மோடியை நம்பவில்லை. உங்களால் தான் ராமர் கோயில் கட்ட முடியும் என்றால்,அது நடக்கப் போவதில்லை. எங்கே... எப்போது அதை கட்டவேண்டும்என்று ராமர் விரும்புகிறோரோ... அப்போது கட்டப்படும். அது பற்றி கோர்ட் தீர்மானிக்கும்.

சன்னி வக்புவாரியத்தின் சார்பில் நான் ஆஜராகவில்லை. கருத்து கூறும் முன்பு உண்மை களை தெரிந்து கொண்டு பிரதமரும், அமித்ஷாவும் கருத்து கூற வேண்டும். அமித்ஷாவை நான் அறிவேன்.அவரிடம் இருந்து சிறப்பாக எதையும் எதிர்பார்க்க முடியாது.பிரதமராவது உண்மையை தெரிந்து பேசி இருக்கலாம். சன்னி வக்பு வாரியத் துக்காக ஒருபோதும் நான் ஆஜரானதில்லை. எனவே உண்மை தெரியாமல் பேசுவது பிரதமருக்கு அழகல்ல.

கோர்ட்டில் நான் சொன்ன கருத்தை வைத்துக்கொண்டு நாட்டில் கடுமையான பிரச்னை களை தோற்றுவிக்கலாமா... பிரதமரின் அறிக்கை யால்  நாடு முழுவதும்சர்ச்சையை உருவாக்கி விட்டார்கள். நமது நா ட்டு மக்களிடம் இப்படி பிரிவினையை ஏற்படுத்தாதீர்கள். அப்படி நினைத் தால் நிச்சயம் நீங்கள் மோசமாக தோற்பீர்கள். இந்தியாவைப் பற்றி நினைக்காமல்,  உங்களைப் பற்றி மட்டுமே நினைத்தால் நிச்சயம் உங்களை இந்தியா இழக்கத்தயாராகி விடும்.

இவ்வாறு அவர் கூறினார்.