முஸ்லிம் வாலிபர் எரித்துக் கொலை

பதிவு செய்த நாள் : 08 டிசம்பர் 2017 07:45


ராஜ்சமாந்த்:

ராஜஸ்தானில் முஸ்லிம் வாலிபர் ஒருவர் எரித்துக் கொல்லப்பட்டார். இந்த காட்சி வீடியோவாக வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராஜ்சமாந்த் மாவட்டத்தைச்சேர்ந்தவர் சாம்புலால். முகம்மது அப்ராசுல் என்ற இளைஞர் கூலித்தொழிலாளியாக இருந்து வந்தார். அவரை அழைத்து வந்து சாம்புலால் சரமாரியாக அடித்தார்.பின்னர் அவரை எரித்துக்கொன்றார். இந்த காட்சியை வீடியோ எடுத்ததுடன் அதை சமூக வலைதளங்களிலும் பரவவிட்டார். இதைக்கண்ட போலீசார் அதிர்ச்சி அடைந்து சாம்புலாலை பிடித்துவிசாரித்தனர். கொலையை ஒப்புக்கொண்ட அவரை போலீசார் கைதுசெய்துள்ளனர். லவ் ஜிகாத்தில் இருந்து இந்துப் பெண்ணை காப்பாற்றவே இப்படிச் செய்ததாக அவர் கூறினார். ஆனால் சாம்புலால் காதலியை முகம்மதுவும் காதலித்ததால்தான் இந்த  கொலை நடந்ததாக  போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.