ஐ.எஸ் அமைப்புடன் இணைந்து செயல்படுவோர் அழிக்கப்படுவார்கள்: பிரிட்டன் பாதுகாப்புத்துறை அமைச்சர் எச்சரிக்கை

பதிவு செய்த நாள் : 08 டிசம்பர் 2017 04:04

லண்டன்:

ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் இணைந்து செயல்படுபவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் அழிக்கப்படுவார்கள் என பிரிட்டனின் புதிய பாதுகாப்புத்துறை அமைச்சர் காவின் வில்லியம்சன் இன்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பிரிட்டன் பாதுகாப்புத்துத்துறை அமைச்சர் காவின் வில்லியம்சன் பிரபல நாளிதழான ”டெய்லி மெயில்” செய்தியாளர்களை இன்று சந்தித்து பேசினார். இதில்,”உயிரிழந்த பயங்கரவாதியால் பிரிட்டன் நாட்டிற்கு தீங்கு விளைவிக்க முடியாது. அதுதான் என்னுடைய கருத்து. நாட்டின் அச்சுறுத்துதலாக இருக்கும் ஒன்றை அழிக்க எது வேண்டுமானாலும் நாம் செய்யலாம்” என்று கூறினார்.
பிரிட்டன் பாஸ்போர்ட் உள்ள சுமார் 800 பேர் சிரியா மற்றும் ஈராக்கிற்கு சென்று பயங்கரவாதத்திற்கு எதிராக போராட சென்றனர்.

அதில் 130 பேர் கொல்லப்பட்டனர். 400 பேர் நாடு திரும்புகின்றனர். மேலும் 270 அந்நாட்டிலேயே இருக்கின்றனர். ”சிரியா மற்றும் ஈராக் நாடுகளில் எங்கு மறைந்து இருந்தாலும் அந்த பயங்கரவாதிகளை கண்டுபிடித்து அவர்களை நாம் வேட்டையாட வேண்டும் இதுபோன்ற பயங்கரவாதிகளுக்கு தஞ்சமடைய இடமில்லாத அளவிற்கு அவர்களை துரத்தியடிக்க வேண்டும். வேறு நாடுகளுக்கு செல்லாதவாறு அவர்களை ஒழிக்க வேண்டும்” என்று வில்லியம்சன் கூறினார்.

கடந்த மாதம் தவறான நடவடிக்கை காரணமாக அப்போதைய பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த மைக்கெல் ஃபாலோன் ராஜினாமா செய்தார். அதைத்தொடர்ந்து, அந்த பதவிக்கு காவின் வில்லியம்சன் தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.