ராகுல் 9வது கேள்வியை டுவிட்டரில் வெளியிட்டார்

பதிவு செய்த நாள் : 07 டிசம்பர் 2017 20:12

புதுடில்லி:

குஜராத் சட்டமன்றத் தேர்தலையொட்டி ஒரு நாளுக்கு ஒரு கேள்வி என்றவகையில் குஜராத் பாஜக அரசை விமர்சனம் செய்யும் தனது 9வது கேள்வியை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

அவரது கேள்வி விவரம்:

விவசாயக் கடன் ரத்து கிடையாது அறிவிக்கப்பட்டுவிட்டது.

விவசாயிகளின் விளைபொருள்களுக்கு நியாயமான விலை கிடைக்கவில்லை.

வறட்சியால் பாதிக்கப்பட்ட குஜராத் மாநிலத்தில் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயன்களும் வழங்கப்படவில்லை.

வறண்ட பகுதிகளில் குழாய் கிணறுகளைகூட அமைக்கப்படவில்லை.

கப்பார் சிங் விவசாயத்தை முடக்கிவிட்டார்.

விவசாயிகளின் நிலம் பறிபோய்விட்டது.

உணவு வழங்கிய அன்ன தாதாக்கள் உதவாக்கரைகளாகிவிட்டனர்.

விவசாயத் தொழிலாளர்கள், விவசாயிகள் விஷயத்தில் ஏன் இந்த மாற்றாந்தாய் மனப்பாங்கு என இந்திய பிரதமர் விளக்கம் அளிப்பாரா என ராகுல் தனது கேள்வியில் குறிப்பிட்டுள்ளார்.

ஜிஎஸ்டியை கப்பார் சிங் வரி என்று விவரித்த ராகுல்காந்தி விவசாயத்தையும் கப்பார் சிங் நசுக்கியதாக 9வது கேள்வியில் குறிப்பிட்டுள்ளார்.