ஹாக்கியில் கலப்பு அணி...

பதிவு செய்த நாள் : 15 நவம்பர் 2017 08:54


புனே : 

சர்­வ­தேச ஹாக்­கிப் போட்­டித் தொடர்­க­ளில் இந்­தி­யா­வின் ஆண், பெண் ஹாக்கி அணி­கள் பங்­கேற்று, சிறப்­பாக விளை­யா­டிக் கொண்­டி­ருக்­கின்­றன. இந்­நி­லை­யில், டென்­னிஸ், பேட்­மின்­டன் ஆகி­ய­வற்­றில் ஆண், பெண் ஒற்­றை­யர் பிரி­வைத்­த­விர, கலப்பு இரட்­டை­யர் பிரிவு போட்­டி­க­ளும் நடை­பெ­று­கின்­றன. இந்­தக் கலப்பு இரட்­டை­யர் பிரிவு இப்­போது துப்­பாக்கி சுடும் போட்­டி­க­ளி­லும் இடம் பெற்­றுள்­ளது.

இந்­நி­லை­யில், இந்­திய ஹாக்கி கூட்­ட­மைப்பு புதிய முயற்­சி­யாக ஆண் வீரர்­கள்/ பெண் வீராங்­க­னை­கள் பங்­கேற்­கும் கலப்பு அணியை உரு­வாக்­கத் திட்­ட­மிட்­டுள்­ளது. இதன்­படி 11 பேர் கொண்ட ஒரு அணி­யில் தலா 5 ஆண், பெண் வீரர்­கள்/வீராங்­க­னை­ கள் இடம் பெறு­வார்­கள். கோல் கீப்­ப­ராக ஆண் அல்­லது பெண் யார் வேண்­டு­மா­னா­லும் இருக்­க­லாம். இந்த அணியை உரு­வாக்­கும் ஒரு திட்­ட­வ­மாக வரும் சனிக்­கி­ழமை புனே பேல்­வா­டி­யில் உள்ள சத்­ர­பதி விளை­யாட்டு அரங்­கத்­தில் பரி­சோ­தனை முறை­யி­லான ஆட்­டம் நடை­பெ­ற­வுள்­ளது.

இது­கு­றித்து ஹாக்கி இந்­தி­யா­வின் பொதுச் செய­லா­ளர் மனோஜ் போரி கூறும்­போது, ‘சர்­வ­தேச ஒலிம்­பிக் கமிட்டி பார்­வை­யா­ளர்­கள் முன்­னி­லை­யில் இந்த, மாதிரி விளை­யாட்­டுப் போட்­டி­கள் நடை­பெ­ற­வுள்­ளன. வரும் 2024ம் ஆண்டு ஒலிம்­பிக் போட்­டி­யில் ஹாக்­கி­யில் ஆண், பெண் கலப்பு அணியை அறி­மு­கம் செய்­யத் திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது. டென்­னிஸ், பேட்­மின்­டன், துப்­பாக்கி சுடு­தல் ஆகி­ய­வற்­றில் கலப்பு இரட்­டை­யர் உள்­ள­து­போல், ஹாக்­கி­யி­லும் ஒரு அணியை உரு­வாக்­கு­வ­தற்­கான பரி­சோ­தனை முயற்சி. விளை­யாட்­டில் பாலின சமத்­து­வத்தை நிலை நிறுத்­தும் வகை­யில் இந்­தப் போட்­டி­கள் இருக்­கும். சர்­வ­தேச அள­வில், கலப்­பின அணி அடிப்­ப­டை­யில் நடை­பெ­றும் முதல் ஹாக்­கிப்­போட்டி இது­வா­கத்­தான் இருக்­கும்’ என்­றார்.

இது­கு­றித்து பேசிய சர்­வ­தேச ஹாக்கி கூட்­ட­மைப்­பின் அதி­கா­ரி­கள், ‘ஹாக்­கி­யில் கலப்பு அணி­யின் விளை­யாட்டு தொடர்­பாக ஏற்­பட்­டுள்ள முன்­னேற்­றத்தை கூர்­மை­யாக கவ­னித்து வரு­கி­றோம். இது வெற்­றி­க­ர­மாக நடை­மு­றைக்கு வந்­தால், ஒலிம்­பிக் போட்­டித் தொடர்­க­ளில் இந்த அணி­க­ளின் ஆட்­டம் இருக்­கும்’ என்­ற­னர்.

வரும் சனிக்­கி­ழமை நடை­பெ­ற­வுள்ள முன்­மா­திரி போட்­டி­யில், இரு அணி­கள் பங்­கேற்­கும். இதில் தலா 5 வீரர்­க­ளும், 4 வீராங்­க­னை­க­ளும் இருப்­பார்­கள். இந்­திய அணி­யின் டாப் ஆர்­ட­ரில் உள்ள தேவேந்­திர வால்­மிகி, ராணி ராம்­பால், கோல் கீப்­பர் சவிதா ராணி மற்­றும் குர்­பி­ரீத் கவுர் ஆகி­யோர் இடம் பெறு­வது உறு­தி­யா­கி­யுள்­ளது.