உலகக்கோப்பைக்கு தகுதிபெறாத இத்தாலி

பதிவு செய்த நாள் : 15 நவம்பர் 2017 08:53


மிலன் :

 சர்­வ­தேச கால்­பந்து கூட்­ட­மைப்­பான பிபா நடத்­தும் உல­கக்­கோப்பை கால்­பந்து போட்­டி­கள் அடுத்த ஆண்டு ரஷ்­யா­வில் நடை­பெ­ற­வுள்­ளன. இதற்­காக உல­கம் முழு­வ­தும் 200க்கும் அதி­க­மான நாடு­க­ளின் அணி­கள் தகு­திப் போட்­டி­க­ளில் பங்­கேற்­றுள்­ளன. இதில் தேர்வு செய்­யப்­ப­டும் 32 அணி­கள் உல­கக்­கோப்­பைத் தொட­ரில் விளை­யா­டும். கடந்த ஞாயிற்­றுக் கிழமை வரை 24 அணி­கள் தங்­கள் பங்­கேற்பை உறுதி செய்­தி­ருந்­தன. இதில் ஐரோப்பா கண்­டத்­தில் இருந்து 10 நாடு­கள் இடம் பெற்­றி­ருந்­தன. இப்­போது இந்­தப் பட்­டி­ய­லில் உள்ள தகு­தி­பெற்ற அணி­க­ளின் எண்­ணிக்கை 29 ஆக உயர்ந்­துள்­ளது.

இந்­நி­லை­யில், ஐரோப்­பா­வின் வலு­வான கால்­பந்து அணி­க­ளில் ஒன்றா இத்­தாலி, 60 ஆண்­டு­க­ளில் இல்­லாத ஒரு சோத­னை­யாக, வரும் உல­கக்­கோப்­பைத் தொட­ரில் பங்­கேற்­ப­தற்­கான தன் வாய்ப்பை பறி­கொ­டுத்­து­விட்­டது. 1958ம் ஆண்டு முதல் உல­கக்­கோப்பை கால்­பந்­தில் ஆதிக்­கம் செலுத்­தும் அணி­க­ளில் ஒன்­றாக இருந்த இத்­தா­லிக்கு, இந்த இழப்பு பெரும் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. நான்கு முறை உலக சாம்­பி­யன் பட்­டம் வென்ற அணிக்கு, இது அதிர்ச்­சி­யைக் கொடுக்­காதா என்ன?

முன்­ன­தாக உல­கக்­கோப்­பைக்­குத் தகுதி பெறும் வகை­யில் மிலன் நக­ரில் நடை­பெற்ற பிளே ஆப் சுற்­றுப் போட்­டி­யில் இத்­தாலி - சுவிட்­சர்­லாந்து அணி­கள் மோதின. இந்­தப் போட்­டி­யில் ஒரு­சில கோல்­கள் அடித்து எந்த ஒரு அணி வெற்றி பெற்று இருந்­தா­லும், அது உல­கக்­கோப்பை ஆடும் அணிப் பட்­டி­ய­லில் இடம் பிடித்­து­வி­டும். ஆனால், ஆட்­டம் முடி­யும் வரை இரு அணி­க­ளும் கோல் அடிக்க முடி­ய­வில்லை. சம­னில் முடிந்­தது. எனி­னும், புள்­ளி­கள் அடிப்­ப­டை­யில் இத்­தா­லியை பின்­னுக்­குத் தள்ளி முன்­னே­றி­யி­ருந்த சுவிட்­சர்­லாந்து, தனக்­கான உல­கக்­கோப்பை இடத்தை தக்க வைத்­துக் கொண்­டது.

இது மிலன் நக­ரில் உற்­சா­க­மாக போட்­டி­யைப் பார்த்­துக் கொண்­டி­ருந்த சுவீ­டன் ரசி­கர்­க­ளுக்கு கொண்­டாட்­டத்­தை­யும், இத்­தாலி ரசி­கர்­க­ளுக்கு வருத்­தத்­தை­யும் கொடுத்­தது.

இத்­தாலி ரசி­கர்­க­ளுக்கு மற்­று­மொரு அதிர்ச்­சி­யாக, அந்த அணி­யின் கோல் கீப்­ப­ராக தூள் கிளப்பி வந்த கியான்­லுாய்கி பபோன், தான் சர்­வ­தேச கால்­பந்து போட்­டி­க­ளில் இருந்து ஓய்வு பெறு­வ­தாக அறி­வித்­துள்­ளார். இது­வரை 5 உல­கக்­கோப்­பை­யில் அவர் விளை­யா­டி­யுள்­ளார் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.