சீன ஓபன் பேட்மின்டன் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியர்கள்

பதிவு செய்த நாள் : 15 நவம்பர் 2017 08:51


பியூ­ஜி­யான் : 

சீனா­வின் பியூ­ஜி­யான் மாகா­ணத்­தில் உள்ள பஸ்­கோவ் நக­ரில் சீன ஓபன் பேட்­மின்­டன் தொடர் தொடங்கி நடை­பெற்று வரு­கி­றது. நேற்று கலப்பு இரட்­டை­யர் பிரி­வில் தகு­திச் சுற்று ஆட்­டங்­கள் தொடங்­கின. ஒற்­றை­யர் பிரி­வில் பிர­தான போட்­டி­கள் இன்று தொடங்­கு­கின்­றன. நேற்று நடை­பெற்ற கலப்பு இரட்­டை­யர் தகு­திச் சுற்­றுப் போட்­டி­யில் இந்­தி­யா­வின் அஸ்­வினி பொன்­னப்பா - ரங்கி ரெட்டி ஜோடி, சீன தைபே­யின் லீஜி ஹூய் - வூ டி ஜங் ஜோடியை எதிர்த்து விளை­யா­டி­யது. இந்­தப் போட்­டி­யில் 24-22, 21-7 என்ற நேர் செட்­க­ளில் சீன தைபே ஜோடியை இந்­திய ஜோடி தோற்­க­டித்­தது. முன்­ன­தாக பொன்­னப்பா - ரெங்கி ரெட்டி ஜோடி டென்­மார்க் ஜோடி­யான நிக்­லஸ் நோர் - சாரா தைஜி­சென் ஜோடியை 21-16, 19-21, 22-20 என்ற செட்­க­ளில் தோற்­க­டித்­தது. இந்­திய கலப்பு ஜோடி தன் அடுத்த சுற்று ஆட்­டத்­தில் டென்­மார்க் நாட்­டின் மற்­றொரு ஜோடி­யான மத்­தி­யாஸ் கிறிஸ்­டி­யன் சென் - கிறிஸ்­டினா பீடெர்­சென் ஜோடியை எதிர்த்து விளை­யா­ட­வுள்­ளது. அதே­போல், சிந்து, சாய்னா, பிர­னோய் உட்­பட முக்­கிய நட்­சத்­தி­ரங்­கள் கலந்து கொள்­ளும் ஆட்­டம் இன்று நடை­பெ­ற­வுள்­ளது.