ஏடிபி டென்னிஸ் தொடர் நடாலை வெளியேற்றிய கோபின்

பதிவு செய்த நாள் : 15 நவம்பர் 2017 08:51


லண்­டன் : 

தொழில்­முறை டென்­னிஸ் வீரர்­கள் சங்­க­மான ஏடிபி அமைப்பு, இந்த ஆண்­டுக்­கான ஏடிபி இறுதி தொடரை லண்­ட­னில் நடத்­தி­வ­ரு­கி­றது. இந்­தத் தொட­ரில் டென்­னிஸ் தர வரி­சைப் பட்­டி­ய­லில் உள்ள நம்­பர் வீரர் நடால் தொடங்கி, நம்­பர் 2 இடத்­தில் உள்ள ரோஜர் பெட­ரர் உட்­பட முதல் 20 இடங்­க­ளில் உள்ள பிர­ப­லங்­கள் பங்­கேற்­றுள்­ள­னர்.

நேற்று நடை­பெற்ற லீக் போட்­டி­யொன்­றில் ஏடிபி தர வரி­சை­யில் நம்­பர் ஒன் இடத்­தில் உள்ள ஸ்பெயின் நாட்­டின் ராபெல் நடால், பெல்­ஜி­யத்­தின் வீர­ரும் ஏடிபி தர வரி­சை­யில் 8ம் இடத்­தில் உள்­ள­வ­ரு­மான டேவிட் கோபினை எதிர்த்து விளை­யா­டி­னார். இந்­தப் போட்டி நடா­லுக்கு அவ்­வ­ளவு எளி­தான ஒன்­றாக இல்லை. முதல் செட் ஆட்­டத்தை 7-6 என்று கோபின் கைப்­பற்­றி­னார். 2ம் செட் ஆட்­டத்­தில் வேகம் காட்­டிய நடால், அந்த ஆட்­டத்தை 6-7 என்ற புள்­ளி­கள் கணக்­கில் கைப்­பற்­றி­னார். இத­னால், வெற்­றி­யா­ளரை முடிவு செய்­யும் 3வது செட் ஆட்­டம் தொடங்­கி­யது. 3ம் செட் ஆட்­டத்தை கைப்­பற்­று­வ­தில் இரு வீரர்­க­ளும் மும்­மு­ரம் காண்­பித்­த­னர். எனி­னும், நடால் ஆட்­டத்­தின்­போது கொஞ்­சம் சோர்ந்து இருந்த வாய்ப்பை, டேவிட் கோபின் பயன்­ப­டுத்­திக் கொண்­டார். இத­னால், 3வது செட் ஆட்­டம் 6-4 என்ற புள்­ளி­கள் கணக்­கில் கோபின் வச­மா­னது. ஏடிபி டென்­னிஸ் லீக் போட்­டி­யில் 7-6, 6-7, 6-4 என்ற செட் கணக்­கில் வெற்­றி­யைப் பற்றி கொடுத்த நடால், ஏடிபி தொட­ரில் இருந்து வெளி­யே­றி­னார். அவ­ரது தோல்வி ரசி­கர்­களை அதிர்ச்­சி­யில் ஆழ்த்­தி­யுள்­ளது. டேவிட் கோபின், தன் அடுத்த சுற்று லீக் ஆட்­டத்­தில் பல்­கே­ரி­யா­வின் வீர­ரும், தர வரி­சைப் பட்­டி­ய­லில் 6ம் இடத்­தில் உள்­ள­வ­ரு­மான கிரி­கோர் டிமிட்­ரோ­வு­டன் விளை­யா­டு­கி­றார்.