களமாட தயாராகிட்டோம் : சந்திமால்

பதிவு செய்த நாள் : 15 நவம்பர் 2017 08:49


கோல்­கத்தா :

 இலங்கை கிரிக்­கெட் அணி, கேப்­டன் தினேஷ் சந்­தி­மால் தலை­மை­யில் இந்­தி­யா­வில் சுற்­றுப் பய­ணம் மேற் கொண்­டுள்­ளது. இந்­திய அணி­யு­ட­னான 3 போட்­டி­கள் கொண்ட டெஸ்ட் தொட­ரில், நாளை கோல்­கத்­தா­வில் முதல் டெஸ்ட் போட்டி தொடங்­கு­கி­றது. இந்­தி­யா­வில் தன் அணியை ஒரு டெஸ்ட் போட்­டி­யி­லா­வது வெற்றி பெறச் செய்ய வேண்­டும் என்­பது கேப்­டன் தினேஷ் சந்­தி­மா­லின் தீவிர எண்­ணம்.

இது­கு­றித்து நேற்று கோல்த்­தா­வில் கிரிக்­கெட் பயிற்­சி­யின்­போது நிரு­பர்­க­ளி­டம் பேசிய சந்­தி­மால், ‘ டெஸ்ட் போட்­டி­க­ளைப் பொறுத்­த­வரை உல­கின் நம்­பர் ஒன் இடத்­தில் உள்ள இந்­திய அணியை எதிர்த்து விளை­யா­ட­வுள்­ளோம் என்­பதை என் வீரர்­கள் நன்­றா­கவே புரிந்து கொண்­டுள்­ள­னர். கடந்த 2 ஆண்­டு­க­ளுக்­கும் மேலாக இந்­திய அணி­யி­னர் சிறப்­பா­ன­தொரு கிரிக்­கெட் விளை­யாட்டை விளை­யா­டிக் கொண்­டி­ருக்­கின்­ற­னர். அதே நேரத்­தில், பாகிஸ்­தான் அணிக்கு எதி­ராக எங்­கள் வீரர்­க­ளும் மிகச் சிறப்­பா­ன­தொரு ஆட்­டத்தை வெளிப்­ப­டுத்தி, நல்ல நிலை­யில் உள்­ள­னர். இந்­தி­யா­வின் வலி­மையை உணர்ந்­துள்­ளோம். எனவே, 16ம் தேதி தொடங்­கும் முதல் டெஸ்ட் போட்­டி­யில், அந்த அணிக்கு சம­மான ஒரு ஆட்­டத்தை வெளிப்­ப­டுத்த ஆயத்­த­மாக உள்­ளோம். இந்­திய மண்­ணில் ஒரு டெஸ்ட் போட்­டி­யைக் கூட இலங்கை அணி வென்­ற­தில்லை என்ற வர­லாற்றை, இந்­தத் தொட­ரில் நாங்­கள் மாற்றி எழு­து­வோம். அத­னால், முதல் டெஸ்ட் போட்­டியை கைப்­பற்றி, இந்­தத் தொடரை வெற்­றி­யு­டன் தொடங்­கு­வோம்.

இலங்கை மண்­ணில் இந்­திய அணி ஜூலை முதல் செப்­டம்­ப­ரில் விளை­யா­டிய தொடர் குறித்து கவ­லை­யில்லை. இப்­போது எங்­கள் அணி புத்­து­ணர்ச்­சி­யு­டன் உள்­ளது. எங்­கள் அணி­யின் திமுத் கரு­ணா­ரத்னே, ஆங்­கிலோ மேத்­யூஸ், நிரோ­ஷன் டிக்­வெல்லா ஆகி­யோர் நல்ல பார்­மில் உ ள்ளனர். இந்­திய அணி­யில் இடம் பெற்­றுள்ள பிர­தான சுழற்­பந்து வீச்­சா­ளர்­க­ளான அஸ்­வின், ஜடேஜா மற்­றும் குல்­தீப் யாதவ் ஆகி­யோரை சமா­ளிக்­கும் வழி­கள் பற்றி எங்­கள் அணி­யு­டன் விவா­தித்­துள்­ளோம். அதே நேரத்­தில், இந்­தி­யா­வின் தொடக்க ஆட்­டக்­கா­ரர்­க­ளான லோகேஷ் ராகுல், முரளி விஜய் மற்­றும் ஷிகர்­த­வான், ஆகி­யோரை எப்­படி விரை­வில் வீழ்த்­து­வது என்­ப­தை­யும் நாங்­கள் கணித்­துள்­ளோம். இந்­திய அணி­யின் அபா­ய­க­ர­மான வீரர்­க­ளில் புஜாரா, ரகானே, ரோஹித் உள்­ள­னர். இவர்­க­ளை­விட கேப்­டன் கோலியை கட்­டுப்­ப­டுத்த வேண்­டும். இதைச் செய்­தால், நிச்­ச­யம் இந்­தத் தொடர் எங்­க­ளுக்கு மறக்க முடி­யாத ஒரு தொட­ராக இருக்­கும்’ என்­றார்.

நம்­பர் ஒன் இடத்தை

தக்க வைப்­போம் : ரஹானே

இலங்கை அணி­யு­ட­னான போட்­டித் தொடர்­கு­றித்து அணி­யின் துணைக்­கேப்­டன் அஜிங்ய ரஹானே பேசும்­போது, ‘இலங்கை மண்­ணில் நாங்­கள் விளை­யா­டிய தொட­ருக்­கும், இந்­தத் தொட­ருக்­கும் மிகுந்த வேறு­பாடு உள்­ளது. இலங்கை அணியை அவ்­வ­ளவு எளி­தில் எடை­போட்­டு­விட முடி­யாது. அவர்­களை லேசா­க­வும் நினைக்­கக் கூடாது. அவர்­கள் இப்­போது நல்ல பார்­மில் உள்­ள­னர். டெஸ்ட் நம்­பர் ஒன் இடத்­தைத் தக்க வைத்­துக் கொள்­வ­தில்­தான் இப்­போது எங்­கள் முழு கவ­ன­மும் உள்­ளது. இதன்­படி பார்த்­தால், இலங்­கை­யு­ட­னான தொடர் மட்­டு­மல்ல, ஒவ்­வொரு தொட­ரும் எங்­க­ளுக்கு மிகுந்த முக்­கி­யத்­து­வம் வாய்ந்த ஒன்­று­தான். அத­னால், ஒவ்­வொரு தொட­ரை­யும் நாங்­கள் வெற்­றி­க­ர­மா­கவே முடிக்­கப் பார்க்­கி­றோம். தென்­னாப்­பி­ரிக்கா தொட­ருக்கு முன்­னர் எங்­க­ளைத் தயார் படுத்­திக் கொள்ள வேண்­டும். அதற்­காக இந்­தத் தொடரை முக்­கி­யத்­து­வம் வாய்ந்த ஒன்­றாக கரு­து­கி­றோம். அங்கே சென்­று­தான் தொட­ருக்­குத் தயா­ராக வேண்­டும் என்­ப­தில்லை, இங்­கி­ருந்து எங்­களை நாங்­கள் தயார் படுத்­திக் கொண்­டி­ருக்­கி­றோம். தென்­னாப்­பி­ரிக்கா தொட­ருக்கு எங்­களை தயார் செய்­யும் அதே நேரத்­தில், இலங்கை அணி­யின் ஆட்­டத்தை நாங்­கள் மிக­வும் மதிக்­கி­றோம். இந்­திய அணி­யில் உள்ள ஒவ்­வொரு வீர­ரும், சூழ்­நி­லைக்­குத் தகுந்­தார்­போல் விளை­யா­டக் கற்­றுக் கொண்­டுள்­ள­னர். இத­னால், நாங்­கள் அட்­ஜெஸ்ட் செய்­வ­தில், எந்­தக் குழப்­ப­மும் இல்லை என்று கரு­து­கி­றேன்’ என்­றார்.

வலைப் பயிற்­சி­யில் அஸ்­வின் இலங்கை அணி­யு­ட­னான டெஸ்ட் தொட­ருக்­குப் பின்­னர் இங்­கி­லாந்­தில் கவுண்டி கிளப் போட்­டி­க­ளில் விளை­யா­டி­வந்த அஸ்­வின், நியூ­சி­லாந்­துக்கு எதி­ரான ஒரு நாள் மற்­றும் டி20 தொட­ரி­லும் கழற்­றி­வி­டப்­பட்­டார். இந்­நி­லை­யில், இலங்­கைக்கு எதி­ரான டெஸ்ட் தொட­ரில் அஸ்­வின் சேர்க்­கப்­பட்­டுள்­ளார். இதை­ய­டுத்து நேற்று காலை கொல்­கத்தா சென்­ற­டைந்த அஸ்­வின், ஈடன் கார்­டன் மைதா­னத்­தில் தலை­மைப் பயிற்­சி­யா­ளர் ரவி­சாஸ்­திரி முன்­னி­லை­யில் தீவிர பந்து வீச்­சுப் பயிற்­சி­யில் ஈடு­பட்­டார்.

வேகத்­துக்கு 3 பேரா?

இலங்­கை­யு­ட­னான இந்­தத் தொடர் முடிந்­த­வு­டன், இந்­திய அணி தென்­னாப்­பி­ரிக்­கா­வில் சுற்­றுப் பய­ணம் மேற் கொள்­ள­வுள்­ளது. தென்­னாப்­பி­ரிக்­கா­வு­ட­னான தொடர் கொஞ்­சம் கடி­ன­மான தொட­ராக இருக்­கும் என்று இந்­திய அணி எதிர்­பார்க்­கி­றது. வழக்­க­மாக 2 வேகப் பந்து வீச்­சா­ ளர்­க­ளைக் கொண்டு டெஸ்ட் போட்­டி­களை சமா­ளிக்­கும் இந்­திய அணி, வரப்­போ­கும் தென்­னாப்­பி­ரிக் தொடரை மன­தில் கொண்டு, இலங்கை அணிக்கு எதி­ரான டெஸ்ட் போட்­டி­க­ளின்­போது 3 வேகப்­பந்து வீச்­சா­ளர்­களை களம் இறக்க திட்­ட­ மிட்­டுள்­ள­தாக பிசி­சிஐ வட்­டா­ரங்­கள் தெரி­வித்­தன.