இந்தியாவில் ராமர் இன்றி எதுவும் நடக்காது: யோகி

பதிவு செய்த நாள் : 15 நவம்பர் 2017 08:27


லக்னோ:

இந்தியாவில் ராமர் பெயரைச்சொல்லாமல் எதுவும் நடக்காது என்று உ.பி. முதல்வர் யோகி ஆதித்யாநாத் கூறினார்.

அயோத்தி பிரச்னையில் சமரச தீ்ர்வு காணும் முயற்சியில் வாழும் கலை நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் ஈடுபட்டுள்ளார். நாளை மறுதினம் அயோத்தி சென்று அனைத்து தரப்பினரையும் சந்திக்கப் போவதாக அவர் கூறிஉள்ளார்.  இது பற்றி உ.பி. முதல்வர் யோகியிடம் நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதில் அளித்த யோகி,"  ரவிசங்கரின் முயற்சியை வரவேற்கிறேன். சமரசம் எந்த மட்டத்தில் நடந்தாலும் நல்லது தான். இந்தியாவில் கடவுள் ராமர் பெயரைச் சொல்லாமல் எதுவும் நடத்தமுடியாது. எதையும் செய்ய முடியாது.   இந்திய மக்களின் நம்பிக்கையே ராமர்தான். என்று குறிப்பிட்டார்.

உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தை அயோத்தியில் நேற்று யோகி துவக்கி வைத்தார். அப்போது பேசிய அவர், அயோத்தி ஒரு புனித பூமி.  முதல்கட்ட தேர்தல் இங்கு தான் நடக்கிறது.  அயோத்தி என்றால் போர் நடக்காத இடம் ஆகும். எனவே பிரசாரத்தை இங்கு துவக்குவதே பொருத்தமானது. இந்த தேர்தலில் நிச்சயமும் பா.ஜ.தான் வெற்றி பெறும். இந்த சோதைனக்கு நாங்கள் தயார். தேர்தல் மட்டுமே எங்களுக்கு சோதனை அல்ல.நித்தமும் சோதனை தான் என்றார்.