இந்தியாவின் வளர்ச்சியில் ஒரு அங்கமே புல்லட் ரயில்... அமைச்சர் பியூஷ்கோயல்

பதிவு செய்த நாள் : 15 நவம்பர் 2017 08:26


புதுடில்லி:

இந்தியாவுக்கு புல்லட்ரயில் திட்டம் தேவையா...  என்று ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயிலுக்கு இணையதளம் மூலமாக கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தன. இதற்கு ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் விளக்கம்அளித்துள்ளார்.  மும்பை–அகமதாபாத் இடையே துவக்கப்பட உள்ள இந்தபுல்லட் ரயிலின் பயன்கள் பற்றி  பிரதமர் மோடி படத்துடன் கிராபிக்ஸ் மூலம் விளக்கி உள்ளார். இந்தியாவின் வளர்ச்சி யில் ஒரு அங்கமே புல்லட்ரயில் திட்டம்.  மக்களுக்கு விரைவான, பாதுகாப்பான சேவை அளிக்கிற திட்டம். இதன் மூலம் சர்வதேச அரங்கில் இந்திய ரயில்வே முன்னிலை வகிக்க உதவும்.  பொதுவாக ஒரு புதிய தொழில்நுட்பம் வருகிற போது எதிர்ப்புகள் இருக்கத்தான் செய்யும். போகப் போக அதன்பயன்களை கண்டு மக்களே மாறுவார்கள். அதே போலத்தான் புல்லட்ரயிலும். 1968ல் ராஜ்தானி ரயில்கள் விடப்பட்டபோது மக்கள் எதிர்த்தார்கள்.ரயில்வே வாரியத் தலைவரே எதிர்த்தார். இப்போது அதில் தான் மக்கள் பயணிக்க ஆசைப்படுகிறார்கள். இந்திய மக்களின் பயணத்தில் ஒரு புரட்சியை புல்லட் ரயில் உருவாக்கும் என்று கூறிஉள்ளார்.