நீரிழிவுக்கு எதிராக போராட ஆரோக்கியமான வாழ்க்கையை பின்பற்ற வேண்டும்: பிரதமர் மோடி

பதிவு செய்த நாள் : 15 நவம்பர் 2017 03:31

சென்னை:

நீரிழிவு நோய்க்கு எதிராகப் போராட ஆரோக்கியமான வாழ்க்கையை பின்பற்ற வேண்டும் என்று பொதுமக்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை கூறியுள்ளார்.

இன்று “உலக நீரிழிவு தினம்” கடைப்பிடிக்கபடுகிறது. அதை முன்னிட்டு பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,

கடந்த மாத 'மான் கி பாத்' (மனதின் குரல்) நிகழ்ச்சியில் இளைஞர்கள் மத்தியில் நீரிழிவு நோய் அதிகரித்திருப்பது குறித்துப் பேசினேன்.

பொது மக்கள் ஆரோக்கியமான வாழ்க்கையைப் பின்பற்றி, நீரிழிவு நோய்க்கு எதிராகப் போராடவேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

உலகளாவிய அளவில் நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த உலக நீரிழிவு தினத்தன்று பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது. இது ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 14-ம் தேதி கொண்டாடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

பிலிப்பைன்ஸில் நடைபெற்று வரும் ஆசியன் மாநாட்டில் கலந்துகொள்ளவதற்காக, இந்திய பிரதமர் நரேந்திர மோடி சென்றுள்ள நிலையில் அவர் டுவிட்டரில் இந்த பதிவையிட்டிருக்கிறார்.