கோவையில் வளர்ச்சி பணிகள் குறித்து தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆய்வு

பதிவு செய்த நாள் : 15 நவம்பர் 2017 02:29

கோவை,

கோவை மாவட்டத்தில் வளர்ச்சி பணிகள் குறித்து தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

தமிழகத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள பன்வாரிலால் புரோஹித் கோவையில் நடைபெற்ற வளர்ச்சி பணிகள் குறித்து இன்று ஆய்வு செய்தார். மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுடன் ஆளுநர் ஆலோசனையிலும் ஈடுபட்டார்.
புதுடில்லி மற்றும் புதுச்சேரியில் ஆளுநராக இருப்பவர்கள் அரசியல் விவகாரங்களில் தலையிடுவதற்கு  ஆளுங்கட்சிகள் மற்றும் பல்வேறு கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன.

கோவையில் இன்று காலையில் பாரதியார் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கலந்து கொண்டார். 

பின்பு அரசு அதிகாரிகளுடனான ஆலோசனைக்குப் பின்னர் கோவை மாவட்டத்தில் அரசியல் கட்சியின் பொறுப்பாளர்களையும், சில தன்னார்வலர்களையும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சந்திக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாவட்ட ஆட்சியர், போலீஸ் கமிஷனர், எஸ்.பி., வேளாண் இயக்குநர், சுகாதாரத்துறை அதிகாரி, வனத்துறை அதிகாரி என 12 துறைகளைச் சார்ந்த அதிகாரிகள் ஆளூநர் ஆலோசனைக் கூட்டத்தில் இடம்பெற்றனர்.

கோவையில் ஆளுநர் ஆய்வு பணியில் ஈடுபட்டது தமிழக அரசியலில்  பல விமர்சனங்களை தோற்றுவித்துள்ளது.