உலகில் முதல் மின்சார சரக்கு கப்பல்: சீனா அறிமுகம்

பதிவு செய்த நாள் : 15 நவம்பர் 2017 01:30

பெய்ஜிங்,

உலகின் முதல் மின்சார சரக்கு கப்பலை சீனா அறிமுகப்படுத்தியுள்ளது.

சீனாவில் முதல் மின்சார சரக்கு கப்பல்களை தென் சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் குவாங்சோவில் அறிமுகப்படுத்தினர். இது 2000-டன் சரக்குகளுடன் 80 கி.மீ வரை பயணிக்க முடியும். மின்சார கப்பல் 70.5 மீட்டர் நீளமுள்ள கப்பல், 600 டன் எடையும் கொண்டது. இதனை 2 மணிநேரம் சார்ஜ் செய்து 80 கிலோ மீட்டர் வரை பயணிக்க முடியும். இந்த மின்சார சரக்கு கப்பல்களை குவாங்சோ கப்பற்படை சர்வதேச நிறுவனம் 26 டன் லித்தியம் பேட்டரி கொண்டு இயக்கப்படும் அளவுக்கு தயாரித்துள்ளது. மின்சார சரக்கு கப்பலில் ஒரு மணி நேரத்திற்கு 12.8 கிமீ வேகத்தில் பயணிக்க முடியும். இந்த சரக்கு கப்பலில் படிம எரிபொருட்களை பயன்படுத்த தேவையில்லை.

மனிதர்களுக்கும் இயற்கைக்கும் இடையேயான நீர் மற்றும் நீரின் தரத்தை இந்த வகையான கப்பல்கள் நல்லிணக்கத்தை கருத்தில் கொண்டு பாதுகாக்க வழிவகுக்கும் என பெய்ஜிங் சுற்றுச்சூழல் வல்லுனரான வாங் யாங்சன் குறிப்பிட்டுள்ளார்.