தமிழகத்தில் 7 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்

பதிவு செய்த நாள் : 15 நவம்பர் 2017 01:10

சென்னை,

தமிழகத்தை சேர்ந்த 7 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அரசு ஆணையின் விவரம் பின்வருமாறு

கோயம்பத்தூர் காவல்துறை ஆணையராக பணிபுரிந்து வந்த டாக்டர் ஏ அமல்ராஜ், திருச்சி நகர காவல்துறை ஆணையராக இடமாற்றப் பட்டுள்ளார்.

திருச்சி காவல்துறை ஆணையராக பணியாற்றி வந்த ஏ. அருண், சென்னை போக்குவரத்து கழகத்தின் ஆணையராக பொறுப்பேற்கவுள்ளார்.

சென்னை போக்குவரத்து கழக ஆணையராக பணியாற்றி வந்த கே பெரியய்யா, கோயம்பத்தூர் நகர காவல்துறை ஆணையராக இடம்மாற்றப்பட்டுள்ளார்.


சென்னை சிஐடி சிவில் சப்ளைஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரலாக பதவி வகித்து வரும் ஜி வெங்கடராமன், சென்னை காவல்துறை இன்ஸ்பெக்டர் ஜெனரலாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை காவல்துறை இன்ஸ்பெக்டர் ஜெனரலாக பணியாற்றி வரும் டாக்டர் ஆர் தினகரன், சென்னை காவல்துறை விரிவாக்கத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.

துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் சோனல் வி. மிஸ்ரா, சென்னை காவலர்கள் பயிற்சி கல்லூரியில் காலியாக உள்ள இடத்திற்கு பணி அமர்த்தப்பட்டுள்ளார்.

உத்தரபிரதேசத்தில் இருந்து தமிழகத்திற்கு இடமாற்றமாகி வந்துள்ள அமநாத் மான், சென்னை காவல்துறை கண்காணிப்பாளராக பணியமர்த்தப்பட்டுள்ளார்.