ராஜ் டிவியில் எம்.ஜி.ஆர். சிறப்பு நிகழ்ச்சி!

பதிவு செய்த நாள் : 15 நவம்பர் 2017

சினிமா உல­கில் எம்.ஜி.ஆர். ஏற்­ப­டுத்­திய தாக்­கம், அர­சி­ய­லில் ஏற்­ப­டுத்­திய அதிர்­வு­கள் ஆகி­யவை இன்­னும் அடங்­க­வில்லை. இதே­போல, உல­கம் முழு­வ­தும் வாழும் தமி­ழர்­க­ளின் இத­யத்­தில் அவர் மீதான ஈர்ப்பு வில­க­வில்லை. அவ­ரது அத்­தனை அசை­வு­க­ளை­யும் பதி­வு­செய்­யும் முயற்­சியை தொடங்­கி­யுள்­ளது ராஜ் டிவி.

'எம்.ஜி.ஆர். நூற்­றாண்டு ஸ்பெஷல்' என்ற  சிறப்பு நிகழ்ச்சி, திங்­கள் முதல் வெள்ளி வரை மாலை 6 மணிக்கு ஒளி­ப­ரப்­பா­கி­றது.

இதில், எம்.ஜி.ஆரின் சாத­னை­கள், சோத­னை­கள், வெற்­றி­கள், தோல்­வி­கள், சர்ச்­சை­கள், சாக­சங்­கள், சறுக்­கல்­கள், திருப்­பங்­கள் என அவ­ரது வாழ்க்­கை­யில் நடந்த சுவா­ரஸ்­ய­மான சம்­ப­வங்­கள் தொகுத்து வழங்­கப்­ப­டு­கின்­றன. பல­ரும் அறிந்­தி­ராத அதி­கா­ரப்­பூர்வ தக­வல்­க­ளும்  இடம்­பெ­று­கின்­றன. இதே­போல, எம்­ஜி­ஆ­ரு­டன் இணைந்து நடித்த நடி­கர்­கள் மற்­றும் ரசி­கர்­க­ளுக்­காக நடத்­தப்­பட்ட போட்­டி­க­ளும் ஒளி­ப­ரப்­பப்­ப­டு­கின்­றன.