மனம் கவரும் காலை நிகழ்ச்சி!

பதிவு செய்த நாள் : 15 நவம்பர் 2017

பெப்­பர்ஸ் டிவி தனது நேயர்­க­ளுக்­கென பல்­வேறு பிரி­வு­க­ளில் சுவை­யான காலை நிகழ்ச்­சி­களை அளிக்­கி­றது. அவற்­றில் ஒன்று 'பெப்­பர்ஸ் மார்­னிங்.' இந்­நி­கழ்ச்சி திங்­கள் முதல் வெள்ளி வரை காலை 7.30 மணிக்கு ஒளி­ப­ரப்­பா­கி­றது. ஸ்ரீதேவி தொகுத்து வழங்­கு­கி­றார்.

இந்த காலை நிகழ்ச்­சி­யில் சிறிய மாற்­றம் பெரிய வெற்றி, நேரம் நல்ல நேரம், யோகம் தரும் யோகா, சிற­க­டிக்­கும் மனசு, இன்று ஒரு கதை போன்ற நிகழ்ச்­சி­கள் அடங்­கும்.

'சிறிய மாற்­றம் பெரிய வெற்றி'  பல சாத­னை­யா­ளர்­க­ளின் வாழ்க்­கை­யில் நடந்த சின்ன சின்ன சம்­ப­வங்­கள் பெரிய வெற்­றி­க­ளுக்கு உறு­து­ணை­யாக இருந்­ததை விளக்­கு­கி­றது.  தின­மும் ஜோதி­டம்  கணிப்­பு­க­ளும், ராசி பலன் நிகழ்ச்­சி­க­ளும் 'நேரம் நல்ல நேரம்' நிகழ்ச்­சி­யி­லும், ஒவ்­வொரு மனி­த­னின் அன்­றாட வாழ்க்­கை­யில் யோகா பயிற்­சி­யும், ஆயுர்­வேத மருத்­து­வ­மும் எவ்­வ­ளவு முக்­கி­யத்­து­வம் வாய்ந்­தது என்­பதை பற்­றிய விழிப்­பு­ணர்வை வழங்­கும் 'யோகம் தரும் யோகா' மற்­றும் 'இன்று ஒரு கதை' போன்ற நிகழ்ச்­சி­கள்  உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளன.

காதல் பிரச்னை, கண­வன், மனை­வி­யி­டையே பிரி­வு­கள், குடும்ப உற­வு­க­ளில் சிக்­கல், மாண­வர்­க­ளின் கல்வி பற்­றிய அச்­சம் மற்­றும் பாது­காப்பு குறிப்­பு­கள் சொல்­லும் நிகழ்ச்­சி­யாக இது இருக்­கும்.