நச்சுத்தன்மை இல்லாத உணவு!

பதிவு செய்த நாள் : 15 நவம்பர் 2017

புது யுகத்­தில் 'அறி­வோம் ஆரோக்­கி­யம்'  திங்­கள் முதல் வெள்ளி வரை மதி­யம் 12 மணிக்­கும் மறு­ஒ­ளி­ப­ரப்­பாக மறு­நாள் காலை 8.30 மணிக்­கும் ஒளி­ப­ரப்­பா­கி­றது. ஆர்­கா­னிக் அறு­சு­வை­களை அறி­மு­கப்­ப­டுத்தி, உணவு வகை­க­ளை­யும் தென்­றல் மது­சூ­த­னன்  செய்து காட்­டு­கி­றார்.

இதில் 15 நிமி­டங்­கள் ஒளி­ப­ரப்­பப்­ப­டும் 'ஆர்­கா­னிக் அறு­சுவை' நிகழ்ச்சி நேயர்­க­ளுக்கு பய­னுள்ள வகை­யில் அமை­யும்.

இப்­ப­கு­தி­யில்,  ரசா­ய­னத்­தின்  வீரி­ய­மில்­லா­மல் இயற்கை உரங்­க­ளால் மட்­டுமே விளை­விக்­கப்­பட்டு கிடைக்­கக்­கூ­டிய அரிய தானி­யங்­கள், பயிர்­கள், தாவ­ரங்­கள், காய்­க­றி­கள், ஆகி­ய­வற்­றின் மகத்­து­வத்தை உணர்த்தி, நம் தேசத்­தின் தட்­ப­வெப்­பம், பாரம்­ப­ரி­யம் மற்­றும் நமது நவீ­ன­கால வாழ்­வி­ய­லுக்கு ஏற்ற வகை­யில் அவற்றை சமைக்­கும் விதம்  செய்து காண்­பிக்­கப்­ப­டு­கி­றது. சத்­தான, நச்­சுத்­தன்­மை­யில்லா உண­வின் மூல­மாக ஒவ்­வொ­ரு­வ­ரின் ஆரோக்­கி­யத்­தை­யும் நவீன சிந்­த­னை­க­ளு­டன் மேம்­ப­டுத்­து­வதே இதன் அடிப்­படை.