திடீர்னு ஒரு திருப்புமுனை! – 'ஆபீஸ்' விஷ்ணு

பதிவு செய்த நாள் : 15 நவம்பர் 2017

திரைக்கு பின்­னால் ஒரு டெக்­னிக்­கல்­மே­னாக இயங்­கிக் கொண்­டி­ருந்­த­வர், விஷ்ணு. அப்­ப­டிப்­பட்­ட­வரை ஒரு ஆர்­டிஸ்ட்­டாக திரைக்கு முன்­னால் நிற்க வைத்து விட்­டான் கால­தே­வன். அது சரி! எல்­லாம் நம் கையிலா இருக்­கி­றது?

இப்­படி 'திடீர்' நடி­க­ரா­கி­விட்ட விஷ்ணு சொன்­ன­தி­லி­ருந்து...

நான் ஒரு காலேஜ் ஸ்டூடன்ட்டா இருக்­கும் போதே ஒரு நல்ல டிவி நிகழ்ச்­சி­யோட கிரி­யேட்­டிவ் ஹெட்டா (ஆக்க தலைமை) ஆக­ணும்ங்­கி­ற­து­தான் என்­னோட ஆசையா இருந்­துச்சு. அந்த வகை­யிலே, விஜய் டிவி­யோட ரியா­லிட்டி நிகழ்ச்­சி­கள் என் கவ­னத்தை ஈர்த்­துச்சு. ஏன்னா, ரியா­லிட்டி நிகழ்ச்­சி­கள்ல அப்போ அவங்­கள 'பீட்' அடிக்க வேற யாரும் கிடை­யாது. இப்­ப­வும்­தான்! காலேஜ் ஸ்டூடன்ட்டா ரெண்டு தடவை இன்­டர்ன்­ஷிப் செய்­யும் போதே விஜய் டிவி­யிலே கேட்­டேன். பட், எனக்கு அந்த சான்ஸ் கிடைக்­கலே. அடுத்து, அவங்­க­ளோட சில நிகழ்ச்­சி­களை வச்சு ஒரு புரா­ஜெக்ட் பண்­ணி­யி­ருந்­தேன். விஜய் டிவி­யிலே என் புரா­ஜெக்டை காட்­டி­னாங்க. அதை பார்த்­துட்டு பிடிச்சு போய் எனக்கு அழைப்பு விடுத்­தாங்க. போனேன். என்னை புரோ­கி­ராம் புரொ­டக் ஷன்ல சேர்த்­துக்­கிட்­டாங்க. ஆனா, உன்னை பார்த்தா, நீ நடிக்க வந்­தி­ருக்­கிற மாதிரி இருக்­கேன்னு தலைமை பொறுப்­பிலே இருக்­கி­ற­வங்க அபிப்­ரா­யப்­பட்­டாங்க.

'காபி வித் அனு' நிகழ்ச்­சி­யிலே உதவி தயா­ரிப்­பா­ளர், 'அழ­கிய தமிழ்­ம­கன்'ல இணை இயக்­கு­னர், இந்த மாதிரி 'ஹோம் ஸ்வீட் ஹோம்' வரைக்­கும் ஒரு டெக்­னீ­ஷி­யனா ஒர்க் பண்­ணிக்­கிட்டு இருந்த என் வாழ்க்­கை­யிலே, திடீர்னு ஒரு திருப்­பு­முனை! ஆர்­டிஸ்ட் ஆயிட்­டேன்!! நடிப்­புன்னா என்­னன்னே தெரி­யாம இருந்த என்னை, ரம­ண­கிரி சார் 'கனா காணும் காலங்­கள் – கல்­லுா­ரி­யின் கதை' சீரி­யல்ல பொசுக்­குன்னு கேமரா முன்­னாடி நிக்க வச்­சிட்­டாரு! அப்­பு­றம், கொஞ்­சம் கொஞ்­சமா என ஆக்­டிங் டேலன்ட்டை வளர்த்­துக்­கிட்­டேன். அப்­பு­றம், 'ஆபீஸ்' சீரி­யல்ல நாலஞ்சு பேர்ல ஒருத்­தரா நடிச்­சேன். ''உன்­னோ­டது ஒரு ஜாலி­யான கேரக்­டர். அத­னால, நீ எந்த அள­வுக்கு அந்த கேரக்­ட­ருக்கு சிறப்பு சேர்க்­கி­றியோ, அந்த அள­வுக்கு லைபே மாறும்''னு ரம­ணன் சார் என்­கிட்ட சொன்­னாரு. அப்­படி சொன்­ன­திலே இருந்து என் காட்சி நல்லா அமை­ய­ணும்னு மெனக்­கிட ஆரம்­பிச்­சேன். ஆக்­டிங்­குல நிறைய சமாச்­சா­ரங்­களை டைரக்­டர் பிரம்மா சாரும் எனக்கு சொல்லி கொடுத்­தாரு. என் ஒரி­ஜி­னல் கேரக்­டர்ல என்­னென்ன விஷ­யங்­கள் வெளிப்­ப­டுதோ, அதைத்­தான் நான் நடிக்­கும் போது சேர்த்­துக்­கு­வேனே தவிர, மத்­த­வங்க நடிப்பை பாலோ பண்­ண­மாட்­டேன். நமக்­குன்னு ஒரு தனித்­து­வம் இருந்­தால்­தான் பீல்­டிலே நிக்க முடி­யும்.

'வெள்­ளக்­கு­தி­ரை­யில் ராஜ­கு­மா­ரன்' படத்­திலே நடிக்­கக்­கூ­டிய வாய்ப்பு கிடைச்­சிச்சு. நடிச்­சேன். அப்­பு­றம், வேற சில படங்­கள்­ல­யும் நடிக்­கி­ற­துக்கு வாய்ப்பு கிடைச்சு டைம் இல்­லா­த­தால என்­னால நடிக்க முடி­யாம போயி­டுச்சு. இன்­னும் சினிமா ஆபர்ஸ் வந்­துக்­கிட்டு இருக்கு. எனக்கு திருப்­தி­க­ரமா இருந்தா கண்­டிப்பா நடிப்­பேன்.''