சாதனை புரிந்த தமிழ் படங்கள் – 319 – எஸ்.கணேஷ்

பதிவு செய்த நாள் : 15 நவம்பர் 2017

கே. பாக்­ய­ரா­ஜின் நடிப்­பில் வெளி­வந்த ‘இது நம்ம ஆளு’ திரைப்­ப­டம், குடும்ப நகைச்­சுவை சித்­தி­ர­மா­கும். நகைச்­சுவை பட­மாக இருந்­தா­லும், கருத்து மிகுந்த சித்­தி­ர­மாக இருந்­தது. அத­னால், ஜன­ரஞ்­ச­க­மாக எல்­லோ­ரா­லும் ரசிக்­கப்­பட்­டது.

 பாக்­ய­ரா­ஜின் மற்ற படங்­களை போல கதை, திரைக்­கதை, வச­னம், இயக்­கம், நடிப்பு என்­றில்­லா­மல், கதை மற்­றும் நடிப்­பு­டன் நிறுத்­திக்­கொண்டு, பால­கு­மா­ரன் இயக்­கத்­தில் நடித்­தார். இந்த படம், கன்­ன­டத்­தில் ‘ரவி சாஸ்­திரி’ என்ற பெய­ரி­லும், தெலுங்­கில் ‘அதி­ரிந்தி அல்­லுடு’ என்ற பெய­ரி­லும் ரீமேக் செய்­யப்­பட்­டது. தமி­ழில் பாக்­ய­ராஜ் நடித்­தி­ருந்த பாத்­தி­ரத்­தில், கன்­ன­டத்­தில் வி. ரவிச்­சந்­தி­ர­னும், தெலுங்­கில் மோகன்­பா­பு­வும் நடித்­தி­ருந்­தார்­கள்.

கோபால்­சாமி என்ற இளை­ஞர் (பாக்­ய­ராஜ்), பி.ஏ. பட்­ட­தாரி. ஆனால், படித்த படிப்­புக்கு வேலை­யில்லை. அவர் தாயின் கண் அறுவை சிகிச்­சைக்­குப் பணம் தேவைப்­ப­டு­கி­றது. சாப்­பாட்­டுக்கே வழி­யில்­லாத அவர், பணத்­துக்கு என்ன செய்­வது என்று தவிக்­கி­றார். அப்­போது ஹோமம் செய்­யப்­போ­கும் பிரா­ம­ணர்­க­ளில் ஒரு­வர் குறைய, வேறு ஜாதி­யைச் சேர்ந்­த­வ­ரான பாக்­ய­ராஜ் பணத்­துக்­காக பிரா­ம­ண­ராக நடிக்க நேரி­டு­கி­றது.

 பணத்­துக்­காக நடித்­தி­ருந்­தால் பர­வா­யில்லை. தொடர்ந்து அப்­படி நடிக்க வேண்­டிய நிர்­பந்­த­மும் ஏற்­ப­டு­கி­றது. ஒரு கட்­டத்­தில் அந்த அக்­ர­ஹா­ரத்­தில் முக்­கிய நப­ரான ஸ்ரீநி­வாச சாஸ்­தி­ரி­க­ளின் நம்­பிக்­கைக்­குப் பாத்­தி­ர­மாகி, அவ­ரு­டைய பெண்­ணையே திரு­ம­ணம் செய்­து­கொள்­ளும் நிலை.

 இந்­நி­லை­யில், கோபால்­சாமி உண்­மை­யான பிரா­ம­ணன் இல்லை, வேறு ஜாதி­யைச் சேர்ந்­த­வர் என்று தெரி­ய­வ­ரு­கி­றது. அதன்­பி­றகு ஸ்ரீனி­வாச சாஸ்­திரி எடுக்­கும் முடிவு என்ன, கோபால்­சாமி அவ­ரு­டைய மகளை மணந்­தாரா என்­பதை நகைச்­சு­வை­யா­க­வும், விறு­வி­றுப்­பா­க­வும் சொல்­லி­யி­ருந்­தார்­கள்.

 சில சுவா­ரஸ்­யங்­கள்!

 * கிட்­டத்­தட்ட கே. பாக்­ய­ரா­ஜின் கடைசி சூப்­பர் ஹிட் படம் என்றே ‘இது நம்ம ஆளு’ படத்­தைச் சொல்லி விட­லாம். அதன் பிறகு அவ­ரது இரண்டு படங்­கள் ('ராசுக்­குட்டி,' 'சுந்­தர காண்­டம்') ஓர­ளவு ஓடி­யி­ருந்­தா­லும், அவ­ரது முந்­தைய படங்­க­ளு­டன் ஒப்­பிட்­டோ­மா­னால்... அவை சுமார் ரகம்­தான்.

* பாக்­ய­ரா­ஜுக்கு நிக­ராக நடித்­தி­ருந்­தார் ஷோபனா. கம­லு­டன் ‘எனக்­குள் ஒரு­வன்’ படத்­தில் ஜோடி­யாக அறி­மு­க­மாகி இருந்­தா­லும், ஷோபனா இந்த படத்­தில் அறி­முக நடி­கை­யா­கவே மீண்­டும் அறி­மு­கம் செய்­யப்­பட்­டார்.

 * இந்த படத்­தின் இயக்­கு­நர் பால­கு­மா­ரன். இயக்­கம் -மேற்­பார்வை என பாக்­ய­ரா­ஜின் பெயர் இடம்­பெற்­றி­ருந்­தது. கதைக்­க­ளம் பிரா­மண சமு­தா­யம் சம்­பந்­தப்­பட்­டி­ருப்­ப­தாக அமைந்­த­தால் இந்த ஏற்­பாட்­டைச் செய்­தார்­களா எனத் தெரி­ய­வில்லை. இதன்­பின் பால­கு­மா­ரன் வேறு எந்த படத்­தை­யும் இயக்­க­வில்லை. வெற்­றி­க­ர­மான வச­ன­கர்த்­தா­வா­கத்­தான் ('குணா,' 'ஜென்­டில்­மேன்,' 'காத­லன்,' 'பாட்ஷா,' 'ஜீன்ஸ்,' 'மன்­ம­தன்') வலம் வந்­தார்.

 * படத்­துக்கு பாக்­ய­ராஜே இசை­ய­மைத்­தி­ருந்­தார்.

 * ‘அம்­மாடி, இது­தான் காதலா...’, ‘காம­தே­வன் ஆல­யம்...’, ‘கண்­ணு­றங்கு பொன்­ம­யிலே...’, ‘நான் ஆளான தாமரை...’, ‘பச்­ச­மலை சாமி ஒண்ணு...’, ‘சங்­கீ­தம் பாட...’ என அனைத்­துப் பாடல்­க­ளுமே ரசி­கர்­க­ளைத் தாளம்­போட வைத்­தன.