அதிசயங்களை நிகழ்த்தும் பேரூர் பட்டீசுவரர்!

பதிவு செய்த நாள் : 14 நவம்பர் 2017கோவை மாந­க­ரி­லி­ருந்து மேற்­கில் வெள்ளியங்­கிரி சிறு­வாணி செல்­லும்  ரோட்­டில் 6 கி.மீ., தொலை­வில் நொய்­யல் ஆற்­றின்  தென்­க­ரை­யில் அமைந்­துள்­ளது, பேரூர். இங்கு வர­லாற்று தொன்மைவாய்ந்த பச்சைநாயகி அம்­பாள் உட­னுறை பட்­டீ­சு­வ­ர­சு­வாமி கோயில் அமைந்­துள்­ளது. இந்த கோயில் தொன்­மை­யும், பெருமையும், சிற்ப சிறப்­பும் ஒருங்கே அமை­யப் பெற்­றுள்ளது.

காம­தேனு, பேரூர் வந்து தவம் செய்து நாள்­தோ­றும் இறை­வனை வழி­பட்டு வந்­தது. ஒரு பவுர்­ணமி நாளில் காம­தேனு சிவபூஜை முடிந்து, சிவ தியா­னத்­தில் இருந்தது. பவுர்­ணமி வெளிச்­சத்­தில் காம­தே­னு­வின் கன்று துள்­ளிக் குதித்து விளை­யா­டும் போது லிங்க மூர்த்­தியை மூடி­யி­ருந்த புற்­றின் மீது ஒரு காலின் குளம்பு அழுத்தியது. அன்று அழுத்திய காலை பெயர்க்க முடி­யா­மை­யால் கொம்­பி­னால் குத்தி புற்றை உடைத்­தது. புற்­றி­னுள் இருந்த சிவ­லிங்­கத் திரு­மே­னி­யில் அழுத்­திய கால் சுவடு, குத்­திய கொம்­பு­சு­வடு வழி­யாக ரத்­தம் வெளிப்­பட்­டது.

அதைக்­கண்ட காம­தேனு இந்த காட்­சியை கண்டு தன் கன்­றின் செய­லுக்கு மிக­வும் வருந்­தி­யது. இறை­வன் காம­தே­னு­வுக்கு காட்சி கொடுத்து ‘‘உன் கன்­றின் செயலை குற்­ற­மா­கக் கொள்­ள­வில்லை. எம்­மு­டி­யில் குளம்­புச்­சு­வட்­டி­னை­யும், கொம்­புச்சுவட்­டி­னை­யும் ஏற்று அரு­ளி­னோம். காம­தே­னு­வா­கிய நீ வழி­பட்டதால், இந்த பேரூர், ‘பட்­டிப்­புரி’ என்­றும், எமக்கு ‘பட்­டி­நா­தர்’ என்ற பெய­ரும் விளங்­கும்’’ என்று கூறி அருள் செய்­தார்.  

சோழன் பூர்­வப் பட்­ட­யத்­தி­லி­ருந்து கரி­கால் சோழன்தான் முதன்முத­லில் பேரூர் கோயில் திருப்­பணி செய்தவன் என்­பது உறு­தி­யா­கின்­றது. குளிக்­கின்ற ஆற்­றுத் துறை ‘கரி­கால்­சோ­ழன் துறை’, என்றே இன்­றும் அழைக்கப்­ப­டு­கி­றது. இங்கு 8ம் நூற்­றாண்­டில் ஒரு பாண்­டிய மன்­னன் வைணவ ஆல­யம் ஒன்­றினை நிறு­வி­ய­தாக தெரி­கி­றது.  11 முதல் 13ம் நுாற்­றாண்­டு­கள் வரை ஆட்சி செய்த கொங்­குச் சோழர்­கள், அர்த்த மண்­ட­பத்தையும், மகா மண்­ட­பத்­தை­யும் கட்­டி­னர்.

14 மற்­றும் 15ம் நுாற்­றாண்­டு­க­ளில் ஹொய்­சா­லர்­க­ளும், விஜய நகர மன்­னர்­க­ளும் இந்த ஆல­யத்­திற்கு மானியங்­கள் வழங்­கி­யுள்­ள­னர். புகழ் வாய்ந்த கன­க­சபை மதுரை அள­காத்ரி நாயக்­க­ரால் 17ம் நுாற்­றாண்­டில் கட்­டப்­பட்­டது. சரித்­திர வர­லாற்­றின்­படி பேரூர் ரோமா­னி­யர் காலத்­தி­லேயே அந்­நாட்­டு­டன் தொடர்பு கொண்­டி­ருந்­தது என்­பதை அக்­கா­லத்­திய நாண­யங்­கள் இங்கு கண்­டு­பி­டித்­த­தன் மூலம் தெரியவரு­கி­றது.

இங்கு வடி­வ­மைக்­கப்­பட்ட சிற்­பங்­கள் ஆயி­ரம் ஆண்டுகளுக்கு முன் இங்கு வாழ்ந்த மக்­க­ளின் பழக்கவழக்­கங்களை படம்பிடித்­துக் காட்­டு­வ­தாக அமைந்­துள்­ளது.

‘பேரூர் புரா­ணம்’ என்ற நூல் 18ம் நுாற்றாண்­டில் வாழ்ந்த கச்­சி­யப்ப முனி­வ­ரால் இயற்­றப்­பட்ட தல வர­லாற்று நுாலா­கும்.

இந்த தலம் மூர்த்தி, தலம், தீர்த்­தம் என மூன்று வகை சிறப்­பு­களை ஒருங்கே அமை­யப்பெற்­றுள்­ளது. 6,  9ம் நுாற்­றாண்­டு­க­ளில் முறையே வாழ்ந்த அப்­பர், சுந்­த­ர­ரால் பாடப்பெற்ற வைப்­புத் தல­மா­கும். அரு­ண­கிரிநாதர் பாடிய திருப்­பு­கழ் மற்­றும் 18ம் நுாற்­றாண்­டில் வாழ்ந்த கச்­சி­யப்ப முனி­வ­ரால் இந்த திருத்­த­லத்­தின் பெரு­மை­கள் விளக்­கப்­பட்­டுள்­ளன.

இத்­தி­ருத்­த­லம் ‘காஞ்­சிமா நதி’ என்­னும் நொய்­யல் ஆற்­றின் கரை­யில் அமைந்­துள்­ளது. இவ்­வூரை வடக்­கி­லும், தெற்­கி­லும் பாது­காத்து நிற்­பவை வட­கை­லா­யம், தென்­கை­லா­யம் என்­னும் ஆல­யங்­க­ளா­கும்.

கோயி­லின் முன் பகு­தி­யில் பட்டி சுற்­றும், மேடைக்கு கிழக்­கில் பாதை­யோ­ரத்­தில் உள்­ளது ‘பிற­வாப்­புளி’. இந்த மரத்­தின் விதை­க­ளைப் போட்­டால், அவை முளையாமை இன்­றும் கண்கூடா­க­ வுள்­ளது.  பேரூர் பகு­தி­யில் வாழ்­வோ­ருக்கு இனி பிறப்­பில்லை என்­பதை இது காட்­டு­கின்­றது.   வட­கைலாத நாதர் கோயி­லுக்கு வட­கி­ழக்­குப் பகு­தி­யில் உள்­ளது. ‘இற­வாப் பனை’ நீண்ட கால­மாக இற­வா­மல் தொடர்ந்து இம்­ம­ரங்­கள் உள்­ளன.

  இப்­ப­கு­தி­யில் வாழ்­வோ­ருக்கு இற­வாத புக­ழு­டம்பு எய்­து­வர் என்­ப­தற்கு இப்­பனை சான்­றாக விளங்­கு­கி­றது.

இங்கு மாண்­டோ­ருக்கு மறுபிறப்­பில்லை என்­பது ஐதீ­கம்.   இறந்­த­வர்­க­ளுக்­கான சடங்­கு­கள் இங்­குள்ள காஞ்­சிமா நதி­யின் சோழன் துறை­யில் நடை­பெ­று­கின்றது.  இறந்­த­வர்­கள் எலும்­பு­களை இந்­ந­தி­யில் போட்ட மூன்று மண்­ட­லங்­க­ளில் வெண்­கற்­க­ளாக மாறி­விடு வதாக ஐதீ­கம்.

உண்­மை­யில் இந்த எலும்­புக்­கு­ரி­ய­வர்­க­ளின் ஆத்மா சாந்­தி­ய­டைந்து விட்­ட­தா­கவே மக்­கள் நம்­பு­கின்றனர். மேலும், இங்கே இறப்­ப­வர்­கள் தமது வலது காதை மேலே வைத்து உயிர் விடு­கின்­ற­னர் என்­ப­தும், இப்­பகுதியில் சாணத்­தில் புழுக்­கள் உண்­டா­கா­மல் இருப்­ப­தும் இத்­த­லத்­தின் புனி­தத்­திற்­கும், பெரு­மைக்­கும் எடுத்­துக்காட்­டாக விளங்­கு­கி­றது.

‘மேலைச்­சி­தம்­ப­ரம்’ என்று அழைக்­கப்­ப­டும் பட்­டீ­சு­வ­ரர் கோயி­லில் அமைந்­துள்ள கன­க­சபை உல­கம் போற்­றும் சிற்­பத்­தி­றன் உடை­யது. நட­ரா­ஜர் வீற்­றி­ருக்­கும் கனகசபை­யின் இரு பக்­கங்­க­ளி­லும் உள்ள எட்டு துாண்­க­ளில் முறையே நர்த்­தன கண­பதி, ஆறு­மு­கப் பெரு­மான், ஊர்த்­தவ தாண்­ட­வர், ஆலங்­காட்­டுக் காளி, அக்­கினி வீரபத்­தி­ரர், அகோர வீர­பத்­தி­ரர், பிச்­சா­ட­னார், யானை யுரி போர்த்த மூர்த்தி போன்­றவை  இடம்பெற்­றுள்­ளன.

 மேற்கூரை­யில் ரதி மன்­ம­தன், அஷ்­ட­திக்­பா­ல­கர்­கள், தாமரை மலர் எட்­டுக் கிளி­கள், கற்­சங்­கி­லி­கள், தாமரை மொட்­டின் மேல் பகு­தி­யில் சுழ­லும் வளை­யம், முன்­பு­றத்­துா­ணில் குதிரை வீரன் புலி­யைக் குத்­தும் வாள் முத­லி­யன அக்­கா­லத்­திய சிற்­பக்­க­லைக்கு எடுத்­துக்­காட்­டாக விளங்­கு­கின்­றன.

குனிந்த புரு­வ­மும், குமிழ் சி­ரிப்­பு­டன் வீற்­றி­ருக்­கும் நட­ரா­ஜ­பெ­ரு­மா­னின் ஆனந்­தக் கோலம் அனை­வரையும் பர­வ­சத்­தில் ஆழ்த்­து­கி­றது.

முரு­கப்பெரு­மான் பழனி, பேரூர், குருந்­த­மலை போன்ற இடங்­க­ளில் மட்­டுமே மேற்கு நோக்கி அருள்­பு­ரி­கின்­றார். திரு­மூ­லர் முத­லாய 18 சித்­தர்­கள் வழி­பட்ட முரு­கன் தலங்­க­ளில் கோரக்­கர் என்ற சித்­த­ரால் வழி­ப­டப்­பெற்ற மூர்த்தி இது­வா­கும்.

இந்த தலத்­திலே மேற்கு நோக்கி எழுந்­த­ரு­ளி­யுள்ள முரு­கன் மிக­வும் சக்தி வாய்ந்த மூர்த்­தி­யா­கும்.  இத்­த­லத்­தில் உள்ள முரு­கப்பெரு­மான் மீது அரு­ண­கிரிநாதர் இரண்டு திருப்­பு­கழ் பாடி­யுள்­ளார். எந்­தத் திருப்புக­ழி­லும் இல்­லாத நிலை­யில் ஞான­நி­லை­யில் மட் டும் கேட்­கப் பெற்று மக்­க­ளுக்கு அரு­ளி­யுள்­ளார். கர்­நா­டக தேசத்து மன்­னர்­க­ளின் திவான் மாதை­யன் என்­ப­வர் மேற்­படி கோயில், தெப்­பக்­கு­ளம், மாதேஸ்வரன் சன்னிதி இவற்றை கட்­டி­ய­தாக கல்­வெட்­டுக்கள் அறி­விக்­கின்­றன. தெப்­பக்­கு­ளத்­தில் அக்கல்­வெட்டு செய்­தியை இன்­றும் காண­லாம்.

இந்த கோயி­லில் பால­தண்ட­ாயுதபாணி சன்னிதி­யின் தென் மேற்கு பாகம் சிதி­ல­மா­ன­தால் 1967ல் பால­தண்டாயுதபாணி சுவாமிக்கு மகா கும்­பா­பி­ஷே­கம் செய்­யப்பட்­டது. கிருத்­திகை, சஷ்டி, விசா­கம், பவுர்ணமி, மாதாந்­திர முதல் ஞாயிற்­றுக்­கிழமை, தமிழ் மாத முதல் தேதி, தமிழ் மாத முதல் ஞாயிற்றுக்கிழமைகளி­லும், தைப்­பூச திருத்­தேர் விழா கொடி­யேற்­றத்­து­டன் மூன்று நாட்­கள் நடக்கிறது.

இங்கு தரி­சிப்­போ­ருக்கு முரு­கன் அரு­ளும், கோரக்­க சித்­த­ரின் அரு­ளும் கிடைக்­கும். முரு­கன் அபி­ஷேக தீர்த்­தம் விழும் தொட்­டி­யின் கீழே கோரக்­கர் சித்­த­ரின் ஜீவ குகை 1967ல் நேரில் பார்த்து அதை கலைக்க உத்­த­ர­வின்றி அப்­ப­டியே திருப்­பணி செய்­யப்­பட்­டது. கோரக்க சித்­தர்  இங்கு ஞான சித்தி பெற்­ற­தாக கூறப்படு­கி­றது. தமிழ் அர்ச்­சனை 1959ம் ஆண்டு முதல் இங்கு நடை­மு­றை­யில் இருந்து வரு­கி­றது.

இந்த கோயி­லில் பங்­குனி உத்­திர தேர்த்­தி­ரு­விழா, திருவாதிரை, தமிழ் ­புத்­தாண்டு, ஆடி, தை, புரட்­டாசி அமாவாசை­கள், தைப்­பூ­சம், சூர­சம்­ஹா­ரம், ஆனி மாதம் நாற்று நடவு உற்­ச­வம், நட­ரா­ஜர் அபி­ஷே­கம், அன்­னாபிஷேகம், சிவ­ராத்­திரி போன்ற முக்­கிய திரு­வி­ழாக்­கள் நடக்­கி­ன்றன.

சுக்­ர­வார ஊஞ்­சல், பிர­தோ­ஷங்­கள், ஏகா­தசி, கிருத்திகை, சஷ்டி, விசா­கம், பிரதி கிருத்­திகை நாட்­க­ளில் திரு­வி­ளக்கு வழி­பாடு நடக்­கி­றது. பிரதி செவ்­வாய்க்கிழ­மை­யும்,  பிர­தோஷ நாட்­க­ளி­லும்   மாலை  3.30 மணிக்கு கோயில் நடை திறக்­கப்­ப­டும்.

தரி­சன நேரம்:  காலை 6 மணி முதல் மதி­யம் 1 மணி வரை. மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை.

மேலும் விவ­ரங்­க­ளுக்கு: கோயில் நிர்­வா­கம்

போன்: 0422 –2607991

 E-mail: patteeswararperur@tnhrce.org

 Website: www.perurpattswarar.tnhrce.in