சபரிமலை செல்ல கார்த்திகையில் விரதம் ஏன்?

பதிவு செய்த நாள் : 14 நவம்பர் 2017

கார்த்திகை ஒரு ஒளி மாதம். இந்த மாதத்தில்தான் சிவன் வானுக்கும், பூமிக்கும் இடையே நெருப்புப் பிளம்பாகக் காட்சி தந்தார். இதையே திருவண்ணாமலையில் தீபமாக தரிசிக்கிறோம். சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து வெளிப்பட்ட ஒளிமிக்க நெருப்பில் இருந்து முருகன் பிறந்தார். அவர் கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டார். இதனால் இந்நாளில் முருகன் கோயில்களிலும் சொக்கப்பனை ஏற்றுவர். ஐயப்பனும் ஜோதி வடிவாக காட்சி தருபவர். எனவே, ஒளியை அடிப்படையாகக் கொண்டு ஒளி மாதமான கார்த்திகையில் அவரை வணங்க மாலை அணிந்து விரதமிருக்கும் வழக்கம் உருவானது. ஒரு காலத்தில் கார்த்திகை நட்சத்திரமே முதல் நட்சத்திரமாக இருந்ததாக சில நூல்களில் சொல்லப்பட்டுள்ளன.