பாட்டிமார் சொன்ன கதைகள் – 139 – சுதாங்கன்

பதிவு செய்த நாள் : 10 நவம்பர் 2017

மகாபாரதம் என்றுமே எதார்த்தமானது!

தோல்­வியை ஒப்­புக்­கொண்டு அதன் அடை­யா­ள­மாக உனது சிரோன்­ம­ணியை அளித்­து­விடு ‘’ என்­றார்.

 `என் தலை­யில் உள்ள சிரோ­மணி மதிப்­பிட முடி­யா­தது. பாண்­ட­வர்­க­ளின் அனைத்து பொக்­கி­ஷங்­க­ளி­லும் மேலா­னது. உங்­கள் சொல்லை மதித்து இதனை அளிக்­கி­றேன்’ என்று கூறி, அதனை தன் தலை­யில் இருந்து விடு­வித்து பீம­னி­டம் அளித்­தான். ` நான் ஏவிய அஸ்­தி­ரத்தை திரும்­பப் பெற முடி­யாது. அதன் இலக்கை மாற்­று­கி­றேன். அது பாண்­ட­வர்­க­ளின் கர்ப்­பங்­க­ளில் விழுந்து அவர்­கள் வம்­சமே இல்­லா­மல் போகட்­டும் ‘ என்­றான் குரோ­தம் தீரா­மல்.

 இதைக்­கேட்ட கிருஷ்­ணர், ` உத்­த­ரை­யின் ஒரு கரை மட்­டும் காப்­பாற்­றப்­ப­டட்­டும் மற்ற எல்­லா­வற்­றின் மீதும் உன் அஸ்­தி­ரம் விழுட்­டும்’ என்­றார்.

கோபம் தணி­யாத அசு­வத்­தாமா, `` கேச­வரே ! பாண்­ட­வர் மீதான பார­பட்­சத்­து­டன் பேசு­கி­றீர். நீர் காப்­பாற்ற விரும்­பும் விரா­ட­னின் மக­னா­கிய உத்­த­ரை­யின் கர்ப்­பத்­தில் போய் இந்த அஸ்­தி­ரம் விழட்­டும்’ என்­றான்.

அசு­வத்­தா­மா­னின் குரோ­தத்­தால் வெறுப்­ப­டைந்த கிருஷ்­ணர், உன் விருப்­பப்­படி நடக்­கட்­டும். இறந்து பிறக்­கும் அந்த குழந்­தைக்கு என் சக்­தி­யால் நான் உயி­ரூட்­டு­வேன். அவன் புக­ழு­டன் விளங்­கு­வான். நீ உல­கத்­தால் இக­ழப்­பட்டு எவர் கண்­ணி­லும் படா­மல் துர்­நாற்­றம் வீசும் உட­லு­டன் மூவா­யி­ரம் ஆண்­டு­கள் திரி­வாய் ‘ என்­றார்.

 அசு­வத்­தா­ம­னின் அஸ்­தி­ரம் உத்­த­ரையை அடைந்­தது. அதன் இலக்கு உத்­த­ரை­யின் கர்ப்­பம் என்­ப­தால் வேறு எவ­ருக்­கும் தீங்கு ஏற்­ப­ட­வில்லை. உத்­தரை பயந்து ஓட அஸ்­தி­ரம் விரட்­டி­யது. உத்­தரை மயங்கி விழுந்­தாள்.

 உத்­த­ரை­யின் வயிற்­றி­லி­ருந்த சிசு அனல் தாங்­கா­மல் துடித்­தது. அதன் கண்­ணுக்கு ஏதோ ஒன்று ஒளி­கக்­கி­ய­படி பாய்ந்து வரு­வது தென்­பட்­டது. அப்­போது கிருஷ்­ணர் அணு­வா­கக் குறுகி கரு­வறை வாயிலை அடைத்­துக் கொண்­டார். அவ­ரது புன்­சி­ரிப்­பு­டன் கூடிய முகம் ஒரு­க­ணம்  குழந்­தை­யின் மன­தில் பதிந்­தது. மறு­க­ணம் குழந்தை மயங்கி கண்­மூ­டி­யது.

பிர­சவ வலி­யில் துடித்த உத்­த­ரைக்கு குழந்தை இறந்தே பிறந்­தது. அரண்­மனை முழு­வ­தும் அழு­கு­ர­லாக இருந்­த­போது கிருஷ்­ணர் அங்கு வந்­தார். குழந்­தையை மெல்ல தடவி, முத்­த­மிட்டு, `` எழு! உத்­த­ரை­யின் மகனே !’’ என்று அழைத்­தார். மறு­க­ணம் குழந்தை கண்­வி­ழித்தி வீரிட்­ட­ழ­தது.

 உத்­த­ரை­யின் மகன் வளர்ந்து பெரி­ய­வ­னா­னான். அவ­னது ஆழத்­தின் ஆழ­மான அடி­ம­ன­தின் புதை­வில் ஒரு ஞாப­கக் கீற்று மட்­டும் இருந்­தது. தாயின் கர்ப்­பத்­தில் தான் இருந்­த­போது வீசிய அன­லும், அதைத் தடுத்­த­படி தோன்­றிய ஒரு அழ­கிய சிரிப்­பு­டன் கூடிய முக­மும், அதில் காட்சி தந்த அருள் நிரம்­பிய கண்­க­ளும் அழுத்­த­மாக அந்­தக் குழந்­தை­யின் மன­தில் பதிந்து விட்­டன. நடை­ப­யில துவங்­கி­ய­துமே அவன் யாரைக் கண்­டா­லும் ஒடிப்­போய் அவர்­கள் முகத்தை ஆழ்ந்து உற்று  நோக்­கு­வான், ` என்ன பார்க்­கி­றாய் ?’ என்று கேட்­டால்,பதில் சொல்ல மாட்­டான். சிறிது நேரம், `ம்ஹூம் இல்லை’ என்­பான்.

இவ்­வாறு எல்­லோ­ரை­யும் இடை­வி­டா­மல் பரீட்சை செய்­த­தால் அவ­னுக்கு பரீட்­சித்து என்றே பெயர் ஏற்­பட்­டது. பின்­னா­ளில் பல ஆண்­டு­கள் கழித்து கிருஷ்­ணர் அவர்­க­ளு­டைய அரண்­ம­னைக்கு வந்­தார். அவ­ரது முகத்­தைக் கண்­ட­துமே உண்­மையை உணர்ந்து கொண்­டான் அவன். குழந்­தை­யில், கர்ப்­பத்­தி­லி­ருந்­த­போது தான் கண்­டது இவ­ரது முகத்­தைத்­தான் என்று உணர்ந்து கொண்­டான்.

 அவ­னைப் பார்த்து புன்­ன­கைத்த கிருஷ்­ணர், `பரீட்ச்சை முடிந்­ததா பரீட்­சித்து,உண்­மையை உணர்ந்­தாயா ?’ என்று கேட்­டார்.  கிருஷ்­ணரை வழங்கி தொழுத பரீட்­சித்­து­வுக்கு அவர் முகம் மன­தில் பதிந்­தி­ருந்­ததே தவிர,மற்ற எது­வும் தெரி­ய­வில்லை. அர்­ஜூ­னைப் போலவே கிருஷ்­ண­ரி­டம் மாறாத பக்தி ஏற்­பட்­டது அவ­னுள்.

 பின்­னா­ளில் பாண்­ட­வர் மறைந்­த­பின்­னர், ஏழு நாளில் பாம்பு கடித்து மர­ணம் ஏற்­ப­டும் என முனி­வ­ரி­டம் சாபம் பெற்ற பரீட்­சித்து  மன்­ன­னுக்கு சுக முனி­வர் நாரா­ய­ண­னின் பெரு­மை­க­ளைக் கூறிப் பாக­வ­தத்தை ஆறு நாட்­கள் உப­தே­சிக்க ஆறே நாளில் ஆத்ம ஞானம் பெற்று உண்­மையை உணர்ந்­தான் பரீட்­சித்து என்­கி­றது பாக­வ­தம்.

மகா­பா­ர­தம் என்­பது எண்­ணற்ற கதா­பாத்­தி­ரங்­க­ளைக் கொண்ட கடல் போன்­றது. ஒவ்­வொரு பாத்­தி­ர­முமே ஏறக்­கு­றைய நமது வாழ்க்­கை­யில் நாம் காணும் ஏதா­வ­தொரு பாத்­தி­ரங்­க­ளைப் போலவே காணப்­ப­டு­கி­றது. பீஷ்­ம­ரைப் போன்ற பெரி­ய­வர் ஒரு­வர் ஒவ்­வொரு வீட்­டி­லும் இயல்­பா­கவே இருப்­பார். வாரி­சு­க­ளுக்கு நல்ல் அறி­வு­ரை­களை அவர்­கள் கூறிக் கொண்­டி­ருப்­பார்­கள். ஆனால் இளை­ய­வர்­கள் தான் அவர்­கள் பேச்சை மதிக்க மாட்­டார்­கள்.

 இன்­றைய எல்லா அர­சி­யல்­வா­தி­க­ளும், ஏன் ஒவ்­வொரு குடும்­பத் தலை­வ­னுமே திரு­த­ராஷ்­ட­ரர்­கள்­தான். மக­னுக்கு பட்­டம் சூட்ட விரும்­பாத தந்தை இந்த உல­கத்­தில் யார் இருக்­கி­றார்­கள்.? முரட்­டுத்­த­னம், முன்­கோ­பம் கொண்ட ஒவ்­வொரு இளை­ஞ­னி­லும்  ஒரு துரி­யோ­த­னனை நம்­மால் காண முடி­யும். சகு­னி­கள் இல்­லாத இடமே உல­கில் கிடை­யாது.  கட­மைக்­கும், பாசத்­துக்­கு­மி­டையே ஊச­லா­டும் ஒவ்­வொ­ரு­வ­ரும் கர்­ணனே. விருப்­பமே இன்றி ஊழு­லுக்கு துணை­போ­கும் ஒவ்­வொ­ரு­வ­ரி­ட­மும் பீஷ்­மர், துரோ­ணர், கிரு­பர் இவர்­கள் அனை­வ­ரை­யும் காண­லாம்.

 பாஞ்­சாலி, நவ­நா­க­ரிக பெண்­க­ளின் முன்­னோடி என­லாம். சீதை, தம­யந்தி, நளா­யினி,மாதிரி அவள் துன்­பங்­களை வாய்­மூடி மவு­ன­மாக ஏற்­றுக் கொள்­ள­வில்லை. உரி­மைக்­கு­ரல் எழுப்­பு­கி­றாள். ` என்னை பண­யம் வைக்க யுதிஷ்ட்­ர­னுக்கு ஏது உரிமை ? முத­லில் அவர் தன்னை பண­யம் வைத்­தாரா ? என்னை பண­யம் வைத்­தாரா ? தன்­னையே ஆடித்­தோற்ற ஒரு­வர் என்னை எப்­படி பண­யம் வைக்க முடி­யும்?