ராஜா ராஜாதான் தொடர் – சிவக்குமார் 8–11–17

பதிவு செய்த நாள் : 08 நவம்பர் 2017


என் பாட்டை ரசித்த முதல் ரசிகர்!

(சென்ற வார தொடர்ச்சி...)

இளை­ய­ரா­ஜா­விற்­கும் பஞ்சு அரு­ணா­ச­லத்­திற்­கும் அப்­ப­டி­யொரு நட்பு, பாசம், விசு­வா­சம் இருந்­தது. பாட­லா­சி­ரி­யர், கதா­சி­ரி­யர், கதை, வச­ன­கர்த்தா, சிறந்த தயா­ரிப்­பா­ளர் இப்­படி அம­ரர் பஞ்சு அரு­ணா­ச­லத்தை சொல்­ல­லாம். அவ­ரைப்­பற்றி இளை­ய­ரா­ஜா­வி­டம் கேட்­டால் பேசிக் கொண்டே இருப்­பார்.

''நான் ஜி.கே. வெங்­கடே ஷிடம் வேலை பார்த்­துக் கொண்­டி­ருந்த போது பாவ­லர் பிர­தர்ஸ் என்ற பெய­ரில் தனியா இசை­ய­மைக்க வந்­தோம். அப்­போது என் நண்­பர் ஆர். செல்­வ­ராஜ் என்­னி­டம் பஞ்சு அரு­ணா­ச­லம் என்­ப­வர் படம் எடுக்க போகி­றார். நீ போய் அவரை பாரு என்று அனுப்பி வைத்­தார்.

அறைக்கு போய் 'அன்­னக்­கிளி உன்னை தேடுதே...', 'மச்­சா­னப் பாத்­தீங்­களா..' இரண்டு டியூன்­களை பாடி காட்­டி­னேன். வெறும் மேஜை­யில் தாளம் போட்­டுக் கொண்டே அவர் ரசித்­தார். அப்­போது இந்த பையன்­கிட்ட நிறைய திறமை இருக்கு, இவன் நல்லா வரு­வான் என்று செல்­வ­ரா­ஜி­டம் சொல்­லி­யி­ருக்­கி­றார்.  இப்­படி என் பாடலை ரசித்த முதல் ரசி­கர் பஞ்சு அண்­ணன்­தான். இன்­னொரு விஷ­யம் 'அன்­னக்­கிளி' படத்­திற்கு முத­லில் 'மருத்­து­வச்சி' என்­று­தான் தலைப்பு வைத்து இருந்­தது. 'அன்­னக்­கிளி உன்னை தேடுதே' பாடல் மிக­வும் பிடித்து போகவே பஞ்சு அண்­ணன்­தான் 'அன்­னக்­கிளி' என்று பெயர் வைத்­தார்.

பஞ்சு அண்­ணனை பற்றி எவ்­வ­ளவோ சொல்­ல­லாம். அவர் சிறந்த பாட­லா­சி­ரி­யர், கவி­ஞர் என்­பது பல­ருக்­கும் தெரி­யும். ஆனால், அவர் எவ்­வ­ளவு சிறந்த திரைக்­க­தா­சி­ரி­யர் என்­பது தெரி­யாத விஷ­யம்.

ரஜினி, கமல் இவ­ரு­வ­ருக்­கு­மான அதி­கப்­ப­டி­யான வெற்­றிப்­ப­டங்­க­ளின் கதை இவ­ரு­டை­ய­து­தான். இந்த இரு­வ­ரை­யும் வைத்து அதிக படங்­களை தயா­ரித்­த­வ­ரும் பஞ்சு அரு­ணா­ச­லம்­தான். ரஜினி – கமலை வைத்து ஒரே­யொரு படம் எடுத்­து­விட்டு வச­தி­யா­ன­வர்­க­ளும் உண்டு. அவ்­வ­ளவு படங்­கள் தயா­ரித்­தும் மிக எளி­மை­யாக இருந்­த­வர் பஞ்சு அவர்­கள்­தான்.

கம­லும், ரஜி­னி­யும் இணைந்து நடித்த காலத்­தில் மக்­க­ளி­டம் இரு­வ­ருக்­கும் நல்ல பெயர் கிடைத்து வளர்ந்து வந்­தி­ருந்த நேரம் அது. இரு­வ­ருக்­கும் கணி­ச­மான ரசி­கர்­கள் உரு­வாகி இருந்த கால­கட்­டம். அப்­போ­து­தான் பஞ்சு அரு­ணா­ச­லம் இரு­வ­ரை­யும் ஒன்­றாக நடிக்க வைத்து ஒரு படம் தயா­ரிக்க திட்­ட­மிட்­டி­ருந்­தார். இரு­வ­ரி­ட­மும் பேசி ஒப்­பந்­தம் போடப்­பட்டு, கால்­ஷீட்­டும் பெறப்­பட்­டி­ருந்­தது.

ஒரு விழா­வில் கம­லும், ரஜி­னி­யும் சந்­தித்­துக் கொண்­ட­போது, ரஜினி, கம­லி­டம் நமக்­குத்­தான் பெயர் வந்­து­விட்­டதே இனி­மேல், நாம் இரு­வ­ரும் ஏன் தனித்­த­னி­யாக நடி­கக்­கக்­கூ­டா­தென்று கேட்­டுள்­ளார். அதற்கு கம­லும் சம்­ம­தம் தெரி­வித்­துள்­ளார். பஞ்சு அண்­ணன் படம் தொடங்கு வதற்­காக அவரை சந்­தித்த போது, விஷ­யத்தை ரஜினி சொல்ல, ''அத­னால் என்ன? இரு­வ­ருமே எனக்கு தனித்­தனி கால்­ஷீட் கொடுத்து விடுங்­கள். இரண்டு படங்­க­ளாக எடுத்து விடு­கி­றேன்'' என்­றார். அதற்கு கமல், ரஜினி ஓ.கே. சொல்ல, இரண்டு படத்­தின் கதை­யை­யும் வெறும் ஏழே நாளில் தயார் செய்து விட்­டார் பஞ்சு. உட­ன­டி­யாக படப்­பி­டிப்பு தொடங்­கி­யது.

முதல் இரண்டு நாள் கால்­ஷீட்­டில் ரஜினி படத்­தை­யும், அடுத்த இரண்டு நாள் கால்­ஷீட்டை கமல் படத்­தி­லும் பயன்­ப­டுத்­திக் கொண்­டார். அந்த இரண்டு படங்­க­ளும் வெள்ளி விழா கொண்­டா­டி­யது. ஒரு படம் 'ஆறி­லி­ருந்து அறு­வது வரை' இன்­னொரு படம், 'கல்­யா­ண­ரா­மன்.' இப்­ப­டிப்­பட்ட திறமை படைத்­த­வர் பஞ்சு அரு­ணா­ச­லம்.

– தொடரும்