சாதனை புரிந்த தமிழ் படங்கள் – 318 – எஸ்.கணேஷ்

பதிவு செய்த நாள் : 08 நவம்பர் 2017

பாசில் இயக்­கிய ‘பூவிழி வாச­லிலே’ ஒரு த்ரில்­லர் படம். இது மலை­யா­ளத்­தில் வந்த ‘பூவினு புதிய பூந்­தென்­றல்’ என்ற படத்­தின் ரீமேக்­கு­தான். பாசில் அதை தமிழ் ரசி­கர்­க­ளுக்கு மேலும் விறு­வி­றுப்­பா­கத் தந்­தி­ருந்­தார்.

 சென்­னை­யில் இந்த படம் 150 நாட்­கள் ஓடி­யது. கோவை, மதுரை, திருச்சி போன்ற நக­ரங்­க­ளில் 100 நாட்­க­ளுக்கு மேல் ஓடி சாதனை படைத்­தது.

 தமி­ழில் வெளி­வந்த மிகச்­சில த்ரில்­லர் படங்­க­ளில் இந்த படத்­திற்கு எப்­பொ­ழு­தும் ஒரு தனி இடம் உண்டு.

 இரண்டு பேர் சேர்ந்து ஒரு பெண்­ணைக் கொலை செய்­கி­றார்­கள். அதனை பார்க்­கி­றான் ஒரு சிறு­வன். கொலை செய்­யப்­பட்­டது அவ­னது தாய். சிறு­வ­னுக்கோ வாய் பேச முடி­யாது, காது கேளாது. அவன் தப்­பித்து, குடி­கா­ர­னான ஜீவா­வி­டம் அடைக்­க­லம் ஆகி­றான். அந்­தக் குழந்தை எங்கே சாட்­சி­யாக மாறி, பேரா­பத்­தா­கி­வி­டுமோ என்று அவ­னைக் கொல்ல கொலை­கா­ரக் கும்­பல் முயற்­சிக்­கி­றது.

 ஜீவா­வும் கொலை­கா­ரக் கும்­ப­லால் தன் குடும்­பத்தை இழந்து முழுக்­க­வும் குடிக்கு அடி­மை­யாகி வாழ்­கி­றான். அவ­னி­டம் இந்­தக் குழந்தை வந்­த­தும், அவ­னைக் கொலை­கா­ரக் கும்­பல் கொல்­லத் துரத்­து­வ­தும் ஏன் என்று தெரி­யா­மல் விழிக்­கி­றான். குடியை மறந்து குழந்­தை­யைக் காப்­பாற்ற நினைக்­கி­றான். அதன் பிறகு வில்­லன்­க­ளைப் பழி­வாங்­கு­வது கதை.

 ஆனால், இந்­தக் கதை­யைச் சொன்ன விதம்... கடைசி வரை என்ன ஆகப்­போ­கி­றதோ என்று ஒரு பதை­ப­தைப்பு உண்­டாக்­கிக்­கொண்டே இருக்­கும். அது­வும் அந்த குழந்­தை­யின் நடிப்பு எளி­தில் மறக்க முடி­யாத ஒன்று.  இளை­ய­ரா­ஜா­வின் இசை இந்த படத்­துக்­குப் பெரிய அள­வில் உத­வி­யது. த்ரில்­லர் படத்­துக்­கு­ரிய ‘திக் திக்’ பின்­னணி இசை புதிய அனு­ப­வத்தை உண்­டாக்­கி­யது.

 சில சுவா­ரஸ்­யங்­கள்

 ராஜா­வாக நடித்­தி­ருந்த குழந்தை நட்­சத்­தி­ரம் சுஜிதா யார் தெரி­யுமா? ‘முந்­தானை முடிச்சு’ படத்­தில் ஊர்­வசி ஒரு குழந்­தையை தரை­யில் போட்­டுத் தாண்­டு­வாரே அந்த குழந்­தை­தான். அவர்­தான் பின்­னர் டிவி தொடர்­க­ளில் சுஜி­தா­வாக பிர­ப­ல­மா­கி­னார். ‘பூவிழி வாச­லிலே’ படத்­தில் சிறு­ வ­ய­தி­லேயே வாய் பேச முடி­யாத, காது கேளாத குழந்­தை­யாக தன் நடிப்­புத்­தி­றனை அபா­ர­மாக வெளிப்­ப­டுத்தி சிறப்­பாக நடித்­தி­ருந்­தார்.

1987ம் வரு­டம் சத்­ய­ரா­ஜுக்கு சிறந்த ஆண்­டாக அமைந்­தி­ருந்­தது. ‘பூவிழி வாச­லிலே’, ‘சின்ன தம்பி பெரிய தம்பி’, ‘ஆளப்­பி­றந்­த­வன்’, ‘மக்­கள் என் பக்­கம்’, ‘வேதம் புதிது’, ‘கடமை கண்­ணி­யம் கட்­டுப்­பாடு’, ‘ஜல்­லிக்­கட்டு’, ஆகிய படங்­க­ளில் நடித்­தி­ருந்­தார். இந்த படங்­க­ளில் பெரும்­பா­லா­னவை நன்­றாக ஓடி சத்­ய­ராஜை சிறந்த நடி­கர் அந்­தஸ்­துக்கு உயர்த்­தி­யது.  ‘சின்­னச் சின்ன ரோசாப்­பூவே’, ‘ஒரு கிளி­யின் தனி­மை­யிலே’, ‘ஆட்­டம் இங்கே’ போன்ற பாடல்­கள், ஹிட் பாடல் வரி­சை­யில் இடம்­பெற்­றன.