தொடரை கைப்­பற்­று­வது யார்...: இந்­தியா–நியூசி., இன்று பலப்­ப­ரீட்சை

பதிவு செய்த நாள் : 07 நவம்பர் 2017 12:06


திரு­வ­னந்­த­பு­ரம்:

இந்­தியா–நியூ­சி­லாந்து அணி­க­ளுக்கு இடை­யே­யான 3வது மற்­றும் கடைசி ‘டுவென்டி–20’ போட்டி கேரள மாநி­லம் திரு­வ­னந்­த­பு­ரத்­தில் இன்று நடக்க உள்­ளது.

வில்­லி­யம்­சன் தலை­மை­யி­லான நியூ­சி­லாந்து அணி 3 ஒரு­நாள், 3 ‘டுவென்டி–20’ போட்­டி­க­ளைக் கொண்ட தொட­ரில் பங்­கேற்­ப­தற்­காக இந்­தியா வந்­துள்­ளது. முத­லில் நடந்த ஒரு­நாள் தொடரை இந்­தியா 2–1 என கைப்­பற்றி அசத்­தி­யது. இந்த நிலை­யில், தற்­போது ரு அணி­க­ளுக்கு இடையே ‘டுவென்டி–20’ தொடர் நடை­பெற்று வரு­கி­றது. இரண்டு போட்­டி­யின் முடி­வில் இரு அணி­க­ளும் தலா ஒரு வெற்­றியை பதிவு செய்­தன. இதை­ய­டுத்து , இந்த தொடரை கைப்­பற்­று­வது யார் என்­பதை தீர்­ம­னிக்­கும் 3வது மற்­றும் கடைசி போட்டி கேரள மாநி­லம் திரு­வ­னந்­த­பு­ரத்­தில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்­கு­கி­றது.

கடந்த போட்­டி­யில் இந்­திய அணி­யின் பேட்­டிங் மற்­றும் பந்­து­வீச்சு சிறப்­பாக இல்லை. இத­னால் வீரர்­கள் தேர்­வில் மாற்­றம் செய்ய வாய்ப்பு இருக்­கி­றது. ஸ்ரேயாஸ் யைர் இடத்­தில் தினேஷ் கார்த்­திக் கள­மி­றக்­கப்­ப­ட­லாம். ஆனால், கடந்த போட்­டி­யில் அறி­மு­க­மான வேகப்­பந்து வீச்­சா­ளர் முக­மது சிரா­ஜூக்கு மீண்­டும் வாய்ப்பு கிடைக்­க­லாம். அதே நேரம் அறி­முக வீரர்­கள் ஸ்ரேயாஸ் அய்­யர், முக­மது சிராஜ் ஆகி­யோர் தங்­க­ளுக்கு கிடைத்த வாய்ப்பை சரி­யாக பயன்­ப­டுத்­திக் கொள்­ள­வில்லை. ஒரு­வேளை திரு­வன;ன்தபு­ரம் ஆடு­க­ளம் சுழற்­பந்து வீச்­சுக்கு சாத­க­மாக இருந்­தால் முக­மது சிராஜ் இடத்­தில் குல்­தீப் யாதவ் இடம்­பெ­ற­லாம். ஆடு­க­ளத்­தின் தண்¬­மையை பொறுத்தே அணி தேர்வு இருக்­கும் என இந்­திய அணி நிர்­வா­கம் தெரி­வித்­துள்­ளது.

இதே போல் ஆஸ்­தி­ரே­லியா தொட­ரில் முத்­திரை பதித்த ஆல்­ர­வுண்­டர் ஹர்த்­திக் பாண்­டியா நியூ­சி­லாந்து தொட­ரில் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­த­வில்லை. நிலை­யான பேட்­டிங் வரி­சை­யில் ஆடா­த­தது அவ­ருக்கு பாதிப்பை ஏற்­ப­டுத்­தி­யது. சிறப்­பாக ஆட வேண்­டிய நெருக்­க­டி­யில் உள்­ளார். ரோகித் சர்மா, தவா­னின் அதி­ர­டி­யான தொடக்­கத்தை பொறுத்தே இந்­திய அணி­யின் ரன் குவிப்பு இருக்­கும். கோஹ்லி, தோனி இரு­வ­ரும் பார்­மில் இருப்­பது இந்­திய பேட்­டிங்கை வலுப்­ப­டுத்தி உள்­ளது.

நியூ­சி­லாந்தை பொறுத்த வரை 20 ஓவர் போட்­டி­யில் திற­மை­யான அணி­யாக திகழ்­கி­றது. பேட்­டிங் மற்­றும் பந்­து­வீச்­சில் சம­ப­லத்­து­டன் திகழ்­கி­றது. பேட்­டிங்­கில் முன்ரோ, கப்­தில், கேப்­டன் வில்­லி­யம்­சன், டாம் லாதம், புரூஸ் ஆகி­யோர் அசத்­து­கின்­ற­னர். இதில், கடந்த போட்­டி­யில் அதி­ர­டி­யாக விளை­யா­டிய முன்ரோ சதம் அடித்து அணியை வெற்றி பெறச் செய்­த­தோடு ஆட்­ட­நா­ய­க­னாக தேர்வு செய்­யப்­பட்­டார். பந்­து­வீச்­சில் பவு­லட், மிலின் ஆகி­யோர் விக்­கெட் வேட்டை நடத்­து­கின்­ற­னர். தவிர, ‘சுழ­லில்’ சான்ட்ன்ர், மோதி இரு­வ­ரும் இந்­திய அணிக்கு கடும் நெருக்­கடி கொடுக்­கின்­ற­னர். இந்த அணி­யின் பீல்­டிங்­கில் நல்ல முன்­னேற்­றம் காணப்­ப­டு­கி­றது. நியூ­சி­லாந்து அணி­யில் மாற்­றம் ஏதும் இருக்க வாய்ப்­பில்லை.

ஒரு­நாள் தொடரை இழந்­த­தால் 20 ஓவர் தொடரை எப்­ப­டி­யா­வது கைப்­பற்­றி­விட வேண்­டும் என்ற ஆர்­வத்­தில் நியூ­சி­லாந்து அணி திகழ்­கி­றது. இத­னால் அந்த அணி வீரர்­கள் முழு திற­மையை பயன்­ப­டுத்தி வெற்றி பெற கடு­மை­யாக போரா­டு­வார்­கள். அதே நேரம் சொந்த மண்­ணில் தொடரை இழக்க இந்­திய வீரர்­க­ளும் தயா­ராக இல்லை. எனவே, இப்­போட்டி ரசி­கர்­கள் மத்­தி­யில் பெரும் எதிர்­பார்ப்பை ஏற்­ப­டுத்தி உள்­ளது. இரு அணி­க­ளும் இது­வரை 8 முறை மோதி உள்­ளனு. இதில் இந்­தியா ஓரு போட்­டி­யில் மட்­டுமே வெற்றி பெற்­றுள்­ளது. நியூ­சி­லாந்து 6 ஆட்­டத்­தில் வெற்றி பெற்­றுள்­ளது. ஒரு ஆட்­டம் ரத்­தாகி உள்­ளது.  

திரு­வ­னந்­த­பு­ரத்­தில் முதல் முறை­யாக போட்டி நடப்­ப­தால் பெரும் எதிர்­பார்ப்பு காணப்­ப­டு­கி­றது. இரவு தொடங்­கும் இப்­போட்­டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ், டிடி சேனல்­க­ளில் நேரடி ஓளி­ப­ரப்பு செய்­யப்­ப­டு­கி­றது.