உங்­களை சந்­திக்­கா­தது வருத்­தம்­தான் மோடிக்கு பிபா தலை­வர் கடி­தம்

பதிவு செய்த நாள் : 07 நவம்பர் 2017 08:06


ஜூரிச் : 

சர்­வ­தேச கால்­பந்த கூட்­ட­மை ப்­பான பிபா, 17 வய­துக்கு உட்­பட்­டோ­ருக்­கான கால்­பந்து போட்­டி­களை இந்­தி­யா­வில் நடத்­தி­யது. இந்­தத் தொட­ரின் இறு­திப் போட்­டி­யில் ஐரோப்­பிய நாடு­க­ளான ஸ்பெயின் மற்­றும் இங்­கி­லாந்து மோதின. இங்­கி­லாந்து அணி 5-2 என்ற கோல் கணக்­கில் ஸ்பெயினை வென்­றது. இந்­தத் தொடரை சிறப்­பாக  நடத்­திய உத­வி­ய­தற்­காக பிர­த­மர் மோடிக்கு நன்றி தெரி­வித்து பிபா தலை­வர் இன்­பான்­டினோ கடி­தம் எழு­தி­யுள்­ளார். அவர் தன் கடி­தத்­தில், ‘யு 17 உல­கக்­கோப்­பைக்­காக இந்­தியா வந்த பிபா உறுப்­பி­னர்­கள், மறக்க முடி­யாத இனிய நினை­வு­கள் மற்­றும் இந்­தி­யா­வில் நல்ல நண்­பர்­களை பெற்ற திருப்­தி­யு­டன் ஜூரிச் திரும்­பி­யுள்­ள­னர். இந்­தத் தொடரை வெற்­றி­க­ர­மாக நடத்த உத­வி­ய­தற்­காக உங்­க­ளுக்­கும், அர­சாங்­கத்­துக்­கும், இந்­திய கால்­பந்து கூட்­ட­மைப்­பு க்­கும் வாழ்த்­துக்­களை தெரி­வித்­துக் கொள்­கி­றேன். போட்­டி­கள் நடை­பெற்ற புது­டில்லி, நவி மும்பை, கோவா, கொச்சி, கவு­காத்தி மற்­றும் கோல்­கத்தா ஆகிய நக­ரங்­க­ளில் நடை­பெற்ற போட்­டித் தொடர்­க­ளுக்கு உள்­ளூர் ஒருங்­கி­ணைப்பு குழு கடும் உழைப்பை வழங்­கி­யி­ருந்­த­தைக் காண முடிந்­தது.

இந்­தத் தொட­ரின் தொடக்க விழா அக்­டோ­பர் 6ம் தேதி டில்­லி­யில் நடை­பெற்­றது. அந்த நிகழ்­வின்­போது,  எனக்கு மற்ற முக்­கிய நிகழ்ச்­சி­கள் இருந்­த­தால் உங்­களை சந்­திக்க முடி­ய­வில்லை. இதற்­காக என் வருத்­தத்தை தெரி­வித்­துக் கொள்­கி­றேன். இருப்­பி­னும் உங்­களை சந்­திப்­ப­தில் மிகுந்த ஆர்­வ­மாக உள்­ளேன். இந்­தி­யா­வின் கால்­பந்து வளர்ச்சி குறித்து அந்த நிகழ்­வின்­போது உங்­க­ளி­டம் பேச விழை­கி­றேன். அகில இந்­திய கால்­பந்து கூட்­ட­மைப்பு இந்­தி­யா­வில் கால்­பந்து விளை­யாட்டை நவீ­னப்­ப­டுத்த புதிய உத்­வே­கத்­து­டன், திட்­டங்­க­ளு­டன் செயல்­பட்டு வரு­கி­றது. அந்த அமைப்­புக்கு என் வாழ்த்­துக்­கள்’ என்று தெரி­வித்­துள்­ளார்.