இது வெறும் டிரை­லர்­தாம்ல: மெயின் பிக்­சர் இனி­மே­தான்

பதிவு செய்த நாள் : 07 நவம்பர் 2017 08:05


புது­டில்லி :

 கேப்­டன் ராணி ராம்­பால் தலை­மை­யி­லான இந்­திய பெண்­கள் ஹாக்கி அணி, ஆசிய கோப்பை இறு­திப் போட்­டி­யில் சீனாவை 5-4 என்ற கோல் கணக்­கில் வீழ்த்தி, 2வது முறை­யாக ஆசிய கோப்­பை­யைக் கைப்­பற்­றி­யது. இதன் மூலம் அடுத்த ஆண்டு நடை­பெ­ற­வுள்ள பெண்­கள் உல­கக்­கோப்பை ஹாக்­கிப் போட்­டி­யில் பங்­கேற்­ப­தற்­கான தன் இடத்தை இந்­திய பெண்­கள் ஹாக்கி அணி தக்க வைத்­துக் கொண்­டி­ருக்­கி­றது.

இது­கு­றித்து பெண்­கள் ஹாக்கி அணி­யின் பயிற்­சி­யா­ளர் ஹரேந்­திர சிங் நிரு­பர்­க­ளி­டம் பேசும்­போது, ‘இந்­திய பெண்­கள் ஹாக்கி அணி­யின் திற­மையை குறைத்து மதிப்­பிட வேண்­டாம். ஆசிய ஹாக்­கிப் போட்டி என்­பது எங்­கள் அணிக்கு ஒரு அடிக்­கல் மட்­டுமே. எங்­கள் அணி வரும் ஆண்­டு­க­ளில் சந்­திக்க வேண்­டிய  போட்­டி­கள், சாதிக்க வேண்­டிய இலக்­கு­கள் அதி­க­மா­கவே உள்­ளது. அடுத்த ஆண்­டில் எங்­கள் அணிக்கு 3 முக்­ட­கய போட்­டி­கள் உள்­ளன. காமன்­வெல்த், ஆசிய விளை­யாட்­டுப் போட்டி மற்­றும் ஹாக்கி உல­கக் கோப்பை ஆகி­யவை பெண்­கள் அணிக்கு சவா­லா­னவை. இவற்­றில் குறைந்­தது இரண்டு பதக்­கங்­களை பெற வேண்­டும் என்­பதே எங்­கள் குறைந்­த­பட்ச இலக்கு. ஆசிய கோப்­பையை 13 ஆண்­டு­க­ளுக்­குப் பின்­னர் நமது அணி கைப்­பற்­றி­யுள்­ளது. முடி­யா­தது என்று எது­வும் இல்லை என்­ப­தையே இது காண்­பிக்­கி­றது. இந்த ஆண்­டில் ஜோஹென்ஸ்­பெர்க் நக­ரில் நடை­பெற்ற ஹாக்கி லீக் அரை­யி­று­திப் போட்­டி­யில் நமது அணி விளை­யா­டும் வரை, பெண்­கள் ஹாக்கி அணியை நான் கூர்ந்து கவ­னித்து, கணித்­த­தாக ஞாப­கம் இல்லை. இளை­யோர் ஹாக்கி அணி­யின் பயிற்­சி­யா­ள­ராக இருந்த என்னை, எந்த நம்­பிக்­கை­யில் பெண்­கள் அணி­யின் பயிற்­சி­யா­ள­ராக நிய­மித்­தார்­களோ, அந்த நம்­பிக்­கையை காப்­பாற்ற முடிந்­தது என்­ப­தில் பெரு­மையே. அணி­யின் பயிற்­சி­யா­ளர் என்ற முறை­யில், அனைத்­துப் போட்­டி­க­ளை­யும் முக்­கி­ய­மா­ன­தா­கவே கரு­து­கி­றேன். இளை­யோர் அணி உல­கக்­கோப்பை வென்­ற­தற்­கும், பெண்­கள் ஹாக்கி அணி ஆசிய கோப்­பையை வென்­ற­தற்­கும் நிறைய வித்­தி­யா­சம் உள்­ளது. இரண்­டை­யும் ஒப்­பி­டவே கூடாது. இளை­யோர் அணிக்கு 3 ஆண்­டு­கள் தயா­ரான நான், பெண்­கள் அணிக்­காக 4 வாரங்­க­ளில் தயா­ரா­னேன். அணி­யை­யும் தயார் செய்­தேன். இரண்டு வெற்­றி­க­ளின் திருப்­தி­யும் வெவ்­வே­றா­னது. ஆனா­லும், இந்த வெற்றி மட்­டும் திருப்­தியை கொடுக்­காது. ஒரு பயிற்­சி­யா­ள­ராக அணி­யின் வெற்­றி­யில் எப்­போ­தும் பசி கொண்­டி­ருக்க வேண்­டும்.

எந்த ஒரு போட்­டி­யாக இருந்­தா­லும், எங்­கள் அணி­யால் பதக்­கம் வெல்ல முடி­யும். ஆனால் தங்­கம், வெள்ளி அல்­லது வெண்­க­லம் ஆகி­ய­வற்­றில் எந்­தப் பதக்­கத்தை வெல்­வது என்­பது அணி வீராங்­க­னை­க­ளின் முனைப்­பி ல்­தான் உள்­ளது. ஆசிய கோப்பை போட்­டி­யில் சீனாவை வென்­ற­தை­விட, உல­கக்­கோப்பை ஹாக்­கிப் போட்­டிக்­கான தகுதி அணி­க­ளில் ஒன்­றாக நாம் தேர்வு பெற்­றதே மிகப் பெரிய வெற்றி. என்­னைப் பொறுத்­த­வரை இது தொடக்­கம்­தான். இன்­னும் நிறைய நல்ல விஷ­யங்­கள் அடுத்த ஆண்­டில் உள்­ளது’ என்­றார்.

தலா ஒரு லட்­சம் பரிசு

பெண்­கள் ஆசிய கோப்பை ஹாக்­கித் தொட­ரில் சாதித்த இந்­திய ஹாக்கி அணி­யின் 18 பேர் கொண்ட அணிக்கு, தலா ஒரு லட்­சம் ரூபாய் வீதம் ரொக்­கப்­ப­ரிசு வழங்­கு­வ­தாக ஹாக்கி இந்­தியா நிர்­வா­கம் அறி­வித்­துள்­ளது. இது­கு­றித்து ஹாக்கி இந்­தியா அமைப்­பின் பொதுச் செய­லா­ளர் முஸ்­தாக் அக­மது கூறும்­போது , ‘ஆசிய கோப்பை ஹாக்­கித் தொட­ரில் இந்­திய பெண்­கள் அணி செய்­தது மகத்­தான ஒரு சாதனை. தொடர் முழு­வ­தும் 28 கோல்­கள் அடித்­துள்­ள­னர். இது நிச்­ச­யம் பெரிய வெற்­றி­தான். 13 ஆண்­டு­க­ளுக்­குப் பின்­னர் இந்த வெற்­றியை கொண்­டா­டும் வகை­யில், இந்­தத் தொட­ரில் பங்­கேற்ற வீராங்­க­னை­கள் அனை­வ­ருக்­கும் தலா ஒரு லட்­சம் ரூபாய் ரொக்­கப்­ப­ரிசு வழங்­கப்­ப­டு­கி­றது’ என்­றார்.