நம்­பர் ஒன் நடால்

பதிவு செய்த நாள் : 07 நவம்பர் 2017 08:03


பாரீஸ் : 

ஆண்­கள் டென்­னிஸ் கூட்­ட­மை ப்­பான ஏடி­பி­யின் தர வரி­சைப் பட்­டி­யல் வெளி­யி­டப்­பட்­டது. இதில், ஸ்பெயின் நாட்­டின் ராபெல் நடால் 10,645 புள்­ளி­க­ளு­டன் தொடர்ந்து முதல் இடத்­தைத் தக்க வைத்­துக் கொண்­டுள்­ளார். 2ம் இடத்தை சுவிட்­சர்­லாந்­தின் ரோஜர் பெட­ரர் 9,005 புள்­ளி­க­ளு­டன் பிடித்­துள்­ளார். 3ம் இடத்­தில் ஜெர்­ம­னி­யின் அலெக்­ஸாண்­டர் வெர்வ் 4,410 புள்­ளி­க­ளு­ட­னும், 4ம் இடத்­தில் ஆஸ்­தி­ரி­யா­வின் டொமி­னிக் தியெம், 5ம் இடத்தை குரோ­ஷி­யா­வின் மாரின் சிலிக் ஆகி­யோர் தக்க வைத்­துக் கொண்­டுள்­ள­னர்.

ஆண்­கள் இரட்­டை­யர் பிரி­வில் இந்­தி­யா­வின் ரோஹன் போபண்ணா ஒரு இடம் கீழ் இறங்கி 15வது இடத்­தைப் பெற்­றுள்­ளார். அவர் 3,790 புள்­ளி­கள் பெற்­றுள்­ளார். மற்­றொரு இரட்­டை­யர் பிரிவு ஆட்­டக்­கா­ர­ரான திவிஜ் சரண், ஒரு இடம் முன்­னேறி ஆயி­ரத்த 525 புள்­ளி­கள் பெற்று 50வது இடத்­தைப் பெற்­றுள்­ளார். திவிஜ் சரண் பெறும் அதி­க­பட்ச சர்­வ­தேச தரப்­பட்­டி­யல் வரிசை இது­வா­கும். இந்­தி­யா­வின் மற்ற இரட்­டை­யர் பிரிவு வீரர்­க­ளான புராவ் ராஜா 62ம் இடம், பெயஸ் 70ம், ஜீவன் நெடுஞ்­செ­ழி­யன் 97வது இடம் பெற்­றுள்­ள­னர்.

பெண்­கள் தர வரி­சைப் பட்­டி­யி­லில் ரோம் நாட்­டின் சிமோனா ஹாலேப் 6,175 புள்­ளி­க­ளு­டன் முதல் இடத்­தி­லும், ஸ்பெயின் நாட்­டின் கார்­பின் முகு­ருசா 6,135 புள்­ளி­க­ளு­டன் 2ம் இடத்­தி­லும் உள்­ளார். பெண்­கள் இரட்­டை­யர் பிரிவு தர வரி­சைப் பட்­டி­ய­லில் முதல் 10 இடங்­க­ளுக்­குள் இருந்த சானியா மிர்சா, 2014ம் ஆண்­டுக்­குப் பின்­னர் நேற்­றைய தர வரி­சைப் பட்­டி­ய­லில் பின்­னுக்கு தள்­ளப்­பட்­டுள்­ளார்.