பார்சிலோனாவை தொடரும் வெற்றி

பதிவு செய்த நாள் : 06 நவம்பர் 2017 08:55


மாட்ரிட்டில் லா லிகா கால்பந்து லீக் போட்டி நடக்கிறது. இங்கு நடந்த லா லிகா கால்பந்து லீக் போட்டியில் பார்சிலோனா அணி 2-1 என்ற கோல் கணக்கில் செவிலா அணியை வீழ்த்தியது. பார்சிலோனா அணியின் அல்காகர் அற்புதமாக விளையாடி 2 கோல் அடித்தார். செவிலா அணி சார்பில் பிகாரோ ஒரு கோல் அடித்தார்.

ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் பார்சிலோனா அணியின் அல்காகர் தனது அணிக்கான முதல் கோலை அடித்தார். அதற்கு பிறகு செவிலா அணி வீரர் அடித்த பெனல்டி கார்னரை அற்புதமாக பிகாரோ கோலாக மாற்றி சமன் செய்தார். அதற்கு பிறகு மெஸ்சி, சுவரேஷ் ஆகியோர் அடித்த பந்து நூலிழையில் கோல் கம்பத்திற்கு மேல் சென்றது. ஆட்டம் முடிய சில நிமிடங்கள் இருக்கும் போது அல்காகர் மேலும் ஒரு கோல் அடித்தார். அதற்கு பிறகு இரு அணிகளும் கடுமையாக கோல் போட முயற்சி செய்தும் கோல் விழவில்லை. இதன் காரணமாக பார்சிலோனா அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. மற்றொரு ஆட்டத்தில் அட்லெடிகோ அணி 1-0 என்ற கோல் கணக்கில் டிபோர்டிவா அணியை வென்றது.