பிலிப்பைன்சில் சரக்கு கப்பல் மூழ்கி விபத்து: 11 இந்தியர்கள் பலி

பதிவு செய்த நாள் : 14 அக்டோபர் 2017 00:58

டோக்கியோ,

பிலிப்பைன்ஸ் கடல் பகுதியில் புயலில் சிக்கி இன்று சரக்கு கப்பல் மூழ்கியது. சரக்கு கப்பலின் தொழிலாளர்களாகச் சென்ற 11 இந்தியர்கள் பற்றி எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.

ஹாங்காங் பகுதியை சேர்ந்த 33,205 டன் எடையுள்ள எமரால்டு ஸ்டார் என்ற சரக்கு கப்பல் பசிபிக் பெருங்கடல் பகுதி வழியாக சென்று கொண்டிருந்தது. அதில் 26 இந்தியர்கள் இருந்தனர். அப்போது புயலில் சிக்கி, பிலிப்பைன்ஸ் எல்லையில் இருந்து சுமார் 280 கிலோமீட்டர் தூரத்தில் இன்று அந்த சரக்கு கப்பல் கடலில் மூழ்கி விட்டது.  அந்த கடல பகுதியில வந்த கப்பல்கள் படகுகள் தண்ணிரில் தத்தளித்துக் கொண்டிருந்த 15 பேரை மீட்டனர். மீதமுள்ள 11 இந்தியர்களின் நிலமை என்ன என்று தெரியவில்லை.

இந்நிலையில் 11 இந்தியர்களை தேடும் பணியில் ஜப்பான் கடலோரக் காவல் படையை சேர்ந்த இரு ரோந்துப் படகுகள் மற்றும் மூன்று விமானங்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. ஜப்பான் கடலோரக் காவல் படை அதிகாரிகள் இந்தத் தகவலைத் தெரிவித்தனர்.

.