அரசு ஹெலிகாப்டர் கம்பெனியை ஏலம் மூலம் விற்க அரசு அறிவிப்பு

பதிவு செய்த நாள் : 14 அக்டோபர் 2017 00:40

புது டில்லி,

அரசுக்கு சொந்தமான ஹெலிகாப்டர் சேவை நிறுவமான பவன் ஹன்ஸின் 51 சதவீத பங்குகள் தனியாருக்கு ஏலம் மூலம் விற்கப்பட உள்ளது.

வெளிநாட்டு நிறுவனங்கள் ஏலத்தொகையை தெரிவிக்கலாம். அவர்களுக்கும் 51 சதவீத பங்குகளை விறகத் தயார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மினி ரத்னா பொதுத்துறை நிறுவனங்களில் பவன் ஹன்ஸ் ஒன்றாகும். உள்நாட்டு போக்குவரத்து அமைச்சகம் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. அந்நிறுவனத்தின் 41 சதவீத பங்குகள் ஓ.என்.ஜி.சி நிறுவனத்திடம் உள்ளது. வெளிநாட்டுக் கம்பெனிகளுக்கோ, தனியாருக்கோ விற்பதன் மூலம்   இதன் வளர்ச்சி பெரும் என அரசு தெரிவித்துள்ளது.
விலை விவரங்களை தாக்கல் செய்ய கடைசி நாள் வரும் டிசம்பர் மாதம் 8 ஆம் தேதியாகும்.