சிங்கப்பூரில் இந்திய நிறுவனத்திற்கு சுற்றுச்சூழல் விருது

பதிவு செய்த நாள் : 14 அக்டோபர் 2017 00:21

சிங்கப்பூர்:

கங்கை நதியின் சுற்றுச்சூழலை மேம்படுத்தியதற்கும், கழிவுநீரை சுத்திகரிப்பு செய்ததற்கும் ஒரு இந்திய பொறியியல் ஆலோசனை நிறுவனத்திற்கு,  சிங்கப்பூரில் மதிப்புமிக்க சுற்றுச்சூழல் விருது இன்று வழங்கப்பட்டது.  

புனேவை சேர்ந்த என்ஜேஎஸ் பொறியாளர்கள் பிரைவேட் லிமிடட் நிறுவனம், ஜப்பான் சர்வதேச கூட்டுறவு நிறுவனத்தின் உதவியோடு கங்கை நடவடிக்கை திட்டம்-II இல் பணிபுரிந்து வருகிறது. இவர்களின் பணியைப் பாராட்டும் விதமாக நேற்று சிங்கப்பூரில் உத்வேகத்திற்கான சுற்றுச்சூழல் விருது அந்த நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.

கங்கை தூய்மைப்படுத்தும் திட்டத்தின்மூலம், நீரின் தரத்தை உயர்த்தி சுற்றுச்சூழலை மேம்படுத்தி, மாசுவை கட்டுப்படுத்த தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர். இதற்காக ரூ. 496.90 கோடி செலவு ஆகும். இந்த திட்டம் வரும் 2018ஆம் ஆண்டு 31ஆம் தேதிக்குள் முடிவடைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

”50க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த குழுக்கள், பரிந்துரை செய்யப்பட்ட 400க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் இருந்து, இந்தியாவை சேர்ந்த இந்த நிறுவனத்திற்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது” என விருது மற்றும் மாநாட்டின் ஒருங்கினைப்பாளர் பெண்ட்லி சிஸ்டம்ஸ் தெரிவித்துள்ளது.