ஸ்டோக்சுக்கு அடிமேல் அடி

பதிவு செய்த நாள் : 13 அக்டோபர் 2017 08:33


லண்டன்: 

இங்கிலாந் தைச் சேர்ந்த அதிரடி ஆட்டக்காரர் மற்றும் ஆல் ரவுண்டரான பென் ஸ்டோக்சுக்கு இது போதாத நேரம் போலி ருக்கிறது. இங்கிலாந்து - ஆஸி., அணிகளுக்கு இடையே நடைபெறும் ஆஷஸ் தொடருக்குத் தேர்வு செய்யப்பட்டிருந்த நிலையில், இரவு விடுதி ஒன்றின் வாசலில் ரகளையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். இதனால் அவரது ஆஷஸ் தொடர் வாய்ப்பு பறிபோனது. இதனால் பென் ஸ்டோக்ஸ் மிகுந்த மன உளைச்சல் அடைந்தார்.

சும்மா இருக்காமல், இங்கிலாந்தின் டிவி பிரபலமான கேத்தி பிரைசின் மாற்றுத் திறனாளி மகன் குறித்து பென் கிண்டலடிக்க, இது இங்கிலாந்தில் காட்டுத் தீயாய் பரவி, பென் ஸ்டோக்சுக்கு கண்டனங்கள் குவிந்தன. இதனால், ஸ்டோக்சுக்கு ஸ்பான்சர் வழங்கி வந்த விளையாட்டு ஆடை, காலணிகள் தயாரிக்கும் நிறுவனமான ‘நியூ பேலன்ஸ்’ <உடனடியாக தன் ஆதரவை விலக்கிக் கொண்டது. இதனால் ஸ்டோக்ஸ் தடுமாறிப்போனார். தன் செயலுக்காக அவர் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுக் கொண்டுள்ளார். ஆனாலும், சிக்கல் இப்போதைக்கு தீராது போலிருக்கிறது.