ஓய்வு பெறுகிறார் நெஹ்ரா

பதிவு செய்த நாள் : 13 அக்டோபர் 2017 08:31


புதுடில்லி:

நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடக்க உள்ள ‘டுவென்டி&20’ போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக ஆஷிஸ் நெஹ்ரா தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் சீனியர் வேகப்பந்துவீச்சாளர் ஆஷிஸ் நெஹ்ரா, 38. கடந்த 1999 பிப்ரவரியில் இலங்கைக்கு எதிரான கொழும்பு டெஸ்டில் அறிமுகம் ஆனார். அசார், கங்குலி, தோனி தற்போது கோஹ்லி என, பல கேப்டன்களுடன் விளையாடிய அனுபவம் வாய்ந்தவர். இவர் இதுவரை 17 டெஸ்ட் (44 விக்கெட்), 120 ஒருநாள் (157 விக்கெட்), 26 ‘டுவென்டி&20’ (34 விக்கெட்) வி¬ளாடி உள்ளார். கடந்த 2011ம் ஆண்டிற்கு பிறகு இவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதன் பின் இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) தெதாடரில் அசத்தியதால் 2016ல் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பினார். இதன் பின் ‘டுவென்டி&20’ போட்டிக்கான அணியில் நெஷ்ராவுக்கு இடம் கிடைத்தாலும் விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. பும்ரா, புவனேஷ்வர், முகமது ஷமி. உமேஷ் யாதவ் போன்றோர் சிறப்பாக செயல்படுவதால் நெஷ்ராவுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு வருககிறது.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டுவென்டி-20 அணியில் சேர்க்கப்பட்ட இவர், முதல் இரு போட்டிகளில் களமிறங்கிய லெவன் அணியில் சேர்க்கப்படவில்லை. இருப்பினும், இவரது அனுபவத்தை இளம் வீரர்கள் பும்ரா உள்ளிட்டோர் பெற்று வருகின்றனர். இன்று நடக்க உள்ள மூன்றாவது போட்டியிலும் நெஷ்ராவுக்கு வாய்ப்பு கிடைக்காது என்றே தெரிகிறது. இந்த நிலையில், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற நெஷ்ரா முடிவு செய்துள்ளார். இதுகுறித்து நெஷ்ரா கூறியதாவது: பதினெட்டு வருட பயணம் முடிவுக்கு வருகிறது. இந்த 18 வருடத்தில் 12 முறை ஆப்பரேஷன் செய்துள்ளேன். எனது உடலில் ஆப்பரேஷன் செய்யாத இடமே இல்லை. இருந்தும் எனது பயணம் சிறப்பாகவே இருந்தது. 2011ல் உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம் பெற்றேன். தவிர, 2016ல் நடந்த உலக கோப்பை ‘டுவென்டி&20’ போட்டியில் இந்திய அணி அரைஇறுதி வரை முன்னேறியது. இந்த இரண்டு தொடரிலும் என்னால் முடிந்த பங்களிப்பை செய்தேன். பல கேப்டன்களுடன் விளையாடிய அனுபவம் எனக்கு உண்டு. இதில், ஒவ்வொரு கேப்டனும் சிறப்பானவர்களே. இருந்தும், கல்குலி தலைமையில் விளையாடியதை என்றும் மறக்க முடியாது.

எனது மொந்த மண்ணில் (டில்லி பெரோஷா கோட்லா மைதானம்) வரும் நவம்பர் 1ம் தேதி நியூசிலாந்துக்கு எதிரான ‘டுவென்டி&20’ போட்டியில் விளையாடுவேன். இதுவே எனது கடைசி சர்வதேச போட்டியாகும். இத்துடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறலாம் என முடிவு செய்துள்ளேன். சொந்த மண்ணில் ஓய்வு பெறுவது எந்த ஒருவீரருக்கும் கவுரவமாக ருக்கும். இந்த வாய்ப்பு தற்போது எனக்கு கிடைத்துள்ளது. அதே நேரம் தொடர்ந்து ஐ.பி,எல்., போட்டியில் பங்கேற்பேன். இந்திய அணியில் திறமையான வேகப்பந்து வீச்சாளர்கள் பலர் உள்ளனர். பும்ரா, புவனேஷ்வர், ஷமி, உமேஷ் ஆகியோர் சிறப்பாக செயல்படுகின்றனர்.

கோஹ்லி தலைமையில் மூன்று வித கிரிககெட்டிலும் இந்திய அணி வலிமையாக உள்ளது. வீரர்களுக்கு இடையே ஆரோக்கியமான போட்டி நிலவுகிறது. வுரும் தொடர்களில் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெறம் என நம்புகிறேன். முன்னாள் கேப்டன்கள், வீரர்கள், ரசிகர்கள் ஆகியோருக்கு எனது நன்றி. இவ்வாறு நெஹ்ரா கூறினார்.