டில்லியில் மாநில கவர்னர்களின் 48வது மாநாடு இன்று தொடக்கம்

பதிவு செய்த நாள் : 13 அக்டோபர் 2017 03:41

புது டில்லி,

மாநில கவர்னர்கள் பங்கேற்கும் 2 நாள் மாநாடு டில்லியில் இன்று தொடங்கியது.

மாநில கவர்னர்களின் 48வது  மாநாட்டுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமை வகிக்கிறார். டில்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்றும் நாளையும் மாநாடு நடக்கிறது.

இந்த மாநாட்டில் 27 மாநிலங்களின் ஆளுநர்கள், 3 துணை நிலை ஆளுநர்கள் மாநாட்டில் பங்கு கொள்கின்றனர்.  பிரதமர் நரேந்திர மோடி மற்றும் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு உள்ளிட்டோர் இந்த மாநாட்டில் உரையாற்றுகின்றனர்.

இந்த மாநாட்டின் முதல் அமர்வில் 2022ம் ஆண்டில்இந்தியா எட்ட வேண்டிய சாதனை இலக்குகள் குறித்து நிதி ஆயோக் வழங்கும் கருத்துரை இடம் பெற்றது.  இதில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், சுஷ்மா ஸ்வராஜ் உட்பட, அமைச்சர்கள் பலரும் கலந்துகொண்டனர்.