யுனெஸ்கோவில் இருந்து அமெரிக்கா வெளியேறியது

பதிவு செய்த நாள் : 13 அக்டோபர் 2017 03:36

ஐ.நா சபை,

ஐக்கிய நாடுகளின் சபையின் அறிவியல் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோவில் இருந்து வெளியேறுவதாக அமெரிக்கா இன்று அறிவித்தது.

யுனெஸ்கோ இஸ்ரேலுக்கு எதிரானவர்களின் கூடாரமாகிவிட்டது என அமெரிக்கா வெளியேறும்போது குற்றம்சாட்டியது. யுனெஸ்கோவில் இருந்து உறுப்பினர் என்ற வகையில் வெளியேறினாலும் பார்வையாளராக அமெரிக்கா தொடர்ந்து இருக்கும் என அமெரிக்க வெளியுறவுதுறை பேச்சாளர் ஹெதர் நவ்எர்ட் கூறினார்.

அமெரிக்காவின் இந்த முடிவு பெரிதும் வருத்தம் அளிப்பதாக யுனெஸ்கோவின் தற்போதைய இயக்குனர் ஜெனரல் ஐரினா போகோவா கூறினார்.

அமெரிக்காவின் முடிவு வெட்கப்பட வேண்டிய முடிவு என பாலஸ்தீன தேசிய முன்முயற்சி இயக்கம் என்ற அமைப்பின் பொதுசெயலாளர் முஸ்தபா பர்ஹூடி கூறினார்.