டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கார் திருட்டு: திருடர்களை கண்டுபிடிக்க போலிசார் தீவிர விசாரணை

பதிவு செய்த நாள் : 13 அக்டோபர் 2017 03:18

புதுடில்லி,

டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் நீல நிற வேகன் ஆர் (Wagon R) கார் டில்லி தலைமை செயலகம் வெளியே நிறுத்தப்பட்டிருந்த பொழுது திருடப்பட்டது.

டில்லி தலைமைச் செயலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கெஜ்ரிவாலின் கார் இன்று மதியம் 1.00 மணியளவில் காணாமல் போனதாக டில்லி போலிசார் தெரிவித்துள்ளனர். காரை திருடியவர்களை போலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கெஜ்ரிவாலின் திருடப்பட்ட நீல நீற வேகான் ஆர் கார், குந்தன் ஷர்மா என்பவரால் கடந்த 2013ம் ஆண்டு ஜனவரி மாதம் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பரிசாக வழங்கப்பட்டது. கடந்த 2015ம் ஆண்டு நடந்த டில்லி சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் அந்த காரை கெஜ்ரிவால் பயன்படுத்தினார். அதன்பின் ஆம் ஆத்மி காரியஸ்தர்கள் அந்த காரைப் பயன்படுத்தி வந்தனர்.