ஓர் ஆண்டுக்குப் பிறகு ஒரே மேடையில் முலாயம் – அகிலேஷ் யாதவ்

பதிவு செய்த நாள் : 13 அக்டோபர் 2017 03:10

லக்னோ,

சமாஜ்வாதி கட்சியில் ஏற்பட்ட குழப்பங்கள் தோன்றிய பிறகு, சுமார் ஓர் ஆண்டுக்குப் பிறகு இன்று ஒரே மேடையில் முலாயம் சிங் யாதவ் மற்றும் அகிலேஷ் சிங் யாதவ் ஆகியோர் பங்கேற்றனர்.

புகழ்பெற்ற சமூக சீர்திருத்தவாதியான ராம் மனோகர் லோஹியாவின் 50-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் முலாயம் மற்றும் அகிலேஷ் யாதவ் ஆகிய இருவரும் ஒன்றாக கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கு ஒன்றாக ஒரே வாகனத்தில் அவர்கள் வந்தனர். அங்கு கூடியிருந்த தொண்டர்களைப் பார்த்து இருவரும் கையசைத்தார்கள்.
பின்னர், இருவரும் ஒன்றாக லோஹியாவின் சிலைக்கு மாலை அணிவித்தனர்.
ஆனால் இந்த நிகழ்வில் ஷிவ்பால் யாதவ் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.