ஈராக்கில் தற்கொலை படையினர் தாக்குதல்: 11 பேர் பலி, 15 பேர் காயம்

பதிவு செய்த நாள் : 13 அக்டோபர் 2017 02:15

பாக்தாத்

ஈராக்கின் மேற்கு பகுதியில் உள்ள ஹிட் நகரில் உள்ள உணவகத்தில், தற்கொலைப் படையினர் இன்று நடத்திய தாக்குதலில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 15 பேர் படுகாயமடைந்தனர்.

ஈராக்கில் பல பகுதிகளில் தற்கொலைப் படையினர் தொடர்ந்து குண்டுவெடிப்பு போன்ற தாக்குதல்களில் ஈடுபட்டுவருகின்றனர். அன்பர் மாகாணம் ஹிட் நகரில் உள்ள ஒரு உணவகத்தில் தற்கொலைப் படையினர் இன்று பயங்கர தாக்குதல் நடத்தினர். அவர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த தாக்குதலில், மேலும் 15 பேர் படுகாயமடைந்தனர். தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு பாதுகாப்புப் படையினரும், மீட்புக்குழுவினரும் விரைந்தனர். காயமடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

ஈராக் பாதுகாப்புப் படையினர் இஸ்லாமிய பயங்கரவாதிகளை ஒழிக்க கடுமையாக போராடி வருகின்றனர். எனினும், பயங்கரவாதிகளின் தாக்குதல் தொடர்ந்து நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.