ரீட்டாப்ராட்டா பானர்ஜி மீதான பாலியல் மோசடிப்புகார்: டில்லி காவல்துறைக்கு மாற்றம்

பதிவு செய்த நாள் : 13 அக்டோபர் 2017 01:56

புதுடில்லி,

மாரக்சிஸ்ட் கட்சியிலிருந்து சமீபத்தில் வெளியேற்றப்பட்ட  ரீட்டாப்ராட்டா திருமணம் செய்வதாக கூறி ஒரு பெண்ணை பாலியல் தொடர்பு வைத்திருந்ததாகவும் பின்னர் திருமணம் செய்ய மறுத்து விட்டதாகவும்  பெண் ஒருவரால் தொடர்பட்ட வழக்கு தற்போது டில்லி காவல்துறைக்கு மாற்றப்பட்டுள்ளது.

மேற்குவங்கம் பாலுர்காட் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கம்யூனிஸ்ட் தலைவர் ரீட்டாப்ராட்டா  பானர்ஜி அவரது டில்லி வீட்டில் தன்னை  திருமணம் செய்துகொள்வதாக நம்பவைத்து உறவு கொண்டதாக கடந்த வாரம் குற்றம்சாட்டினார். மேலும் இப்போது வேறு ஒரு பெண்ணுடன் ரீட்டாப்ராட்டா தொடர்பு வைத்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
இதுதொடர்பாக மேற்கு வங்க காவல்துறையினரிடம் அப்பெண் புகார் பதிவு செய்தார். அந்த புகாரை விசாரித்த மேற்கு வங்க காவல்துறை வெள்ளிக்கிழமை விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி ரீட்டாப்ராட்டா  பானர்ஜிக்கு நோட்டிஸ் அனுப்பியது.

இந்த விவகாரம் தொடர்பாக செய்தி வெளியிட்ட ரீட்டாப்ராட்டா  பானர்ஜீ அப்பெண்ணி குற்றசாட்டு பொய் என அறிவித்தார். தவறான குற்றசாட்டை சுமத்தியதற்காக அப்பெண்ணின் மீது ரீட்டாப்ராட்டா கொல்கத்தா கர்ஃபா காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்நிலையில் இந்த வழக்கை மேற்கு வங்க காவல்துறை டில்லி காவல்துறைக்கு மாற்றம் செய்துள்ளது.

மாநிலங்களவை முன்னாள் உறுப்பினரான் ரீட்டாப்ராட்டா கட்சிக்கு எதிராக செயல்பட்ட காரணத்தால் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து நீக்கப்பட்டது குறிப்படத்தக்கது. மோசடி டெல்லியில் நடந்ததாக அப்பெண் தனது புகாரில் கூறியுள்ளார். அதனால் டெல்லி போலீசாருக்கு மேல் விசாரணைக்காக மனு மாற்றப்பட்டுள்ளது.