குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி பாதிப்பை ஈடு செய்ய புதியகடன்: பாரத ஸ்டேட் வங்கி அறிவிப்பு

பதிவு செய்த நாள் : 13 அக்டோபர் 2017 01:46

மும்பை,

குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி காரணமாக ஏறபட்டுள்ள நிதிப்பற்றாக்கூறையை ஈடு செய்ய புதிய குறுகிய கால நடைமுறை மூல தனக்கடன் வழங்கப்படும் என பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது. இதற்கு எஸ்.எம்.இ அசிஸ்ட் (SME Assist) என்று பெயரிடப்பட்டுள்ளது.

தொழில நிறுவனத்தின் மதிப்பிடப்பட்ட கடன் தேவைக்கு மேலாக இந்தக கடன் வழங்கப்பட்டுவிடும். கடனின் அளவு மொத்தக கடனில் 20 சதவீதம் அல்லது இன்புட் கிரெடிட் கோரிக்கையில் 80 சதவீதம் அளவுக்கு கடன் வழங்கப்படும். இக்கடன்கள் சலுகை வட்டிக் கடனாக அமையும் என்றும் வங்கி அறிவித்துள்ளது.
 ‘‘மேலும் தொழில் நிறுவனங்கள் எந்தச் சிக்கலும் இல்லாமல் உற்பத்தி நடவடிக்கைகளை தொடர இந்தக் கடன் திட்டம் உதவும்" என்று வங்கியின் தலைமை பொது மேலாளர் வி ராம்லிங் கூறினார்.

இந்த திட்டத்தின் கீழ் கடன் கோரும் மனு மீதான பரிசீலனைக் கட்டணம் ரூ. 2000 ஆகும். கடனுக்காக விண்ணப்பிக்கும் நிறுவனங்கள் தங்களின் இன்புட் கிரெடிட் பற்றிய விவரங்களை உறுதி செய்ய பட்டய கணக்கரின் சான்றிதழை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
மேலும் இத்திட்டத்தின் கீழ், கடன் வாங்குபவர்களுக்கு கடனைத் திருப்பிச் செலுத்த முதல் மூன்று மாதங்கள் அவகாசம் வழங்கப்படும் என்று பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது. அதன் பிறகு கடனை ஒரே தவணையில் செலுத்தலாம் . அல்லது அடுத்த ஆறு மாதங்களில் கடன் தொகையை ஆறு சம தவணைகளில் செலுத்தலாம். 

குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் எம் எஸ் ஈ அசிஸ்ட் திட்டக் கடனை மார்ச் 31, 2018 வரை பெறலாம். ஜிஎஸ்டி திட்டத்தின் கீழ் செலுத்தப்பட்ட வரிக்கான இன்புட் கிரெடில் இன்னும் வழங்கப்படாத காரணத்தால் குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் நிதி தட்டுப்பாட்டினால் தவிக்கும் நிலை உள்ளது. அதறகு தீரவு காண ஸ்டேட் வங்கித் திட்டம் உதவக்கூடும்.