ஜம்மு காஷ்மீர் வங்கியில் துப்பாக்கி முனையில் ரூ. 5 லட்சம் கொள்ளை

பதிவு செய்த நாள் : 13 அக்டோபர் 2017 01:25

ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் முகமூடி அணிந்து வந்த மர்ம நபர்கள் வங்கியில் ரூ. 5 லட்சத்தைக் கொள்ளையடித்துச் சென்றனர்.

காஷ்மீரில் அனந்தநாக் மாவட்டம் பிஜ்பெகராவில் உள்ள வங்கி இன்று வழக்கம்போல் செயல்பட்டு வந்தது. அப்போது திடீரென முகமூடி அணிந்த நான்கு பேர் வங்கியில் நுழைந்தனர். முகமூடி கொள்ளையர்கள் துப்பாக்கி முனையில் வங்கிக்கு வந்திருந்த வாடிக்கையாளர்கள் மற்றும் அலுவலர்களை மிரட்டினர். பின் வங்கியிலிருந்த ரூ. 5 லட்சம் பணத்தை கொள்ளையடித்துக்கொண்டு தப்பித்துச் சென்றனர். இதையடுத்து  அப்பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். வங்கிக் கொள்ளையில் ஈடுப்பட்டவர்களை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகிறார்கள்.