நடிகர் சந்தானத்தின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணை நாளை ஒத்திவைப்பு

பதிவு செய்த நாள் : 12 அக்டோபர் 2017 23:39

சென்னை,

நடிகர் சந்தானத்தின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் நாளைக்கு ஒத்திவைத்துள்ளது.

பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் பாஜக பிரமுகரும் வழக்கறிஞருமான பிரேம் ஆனந்த் என்பவரை நடிகர் சந்தானம் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக சந்தானத்தின் மீது போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இதையடுத்து நடிகர் சந்தானம் தலைமறைவானார். மேலும் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கலும் செய்தார்.
முன்ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர் சந்தானத்திற்கு முன்ஜாமீன் வழங்க பிரேம் ஆனந்த் தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது.

இதையடுத்து முன்ஜாமீன் மனு மீதான வழக்கு விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் நாளைக்கு (13-10-2017) ஒத்திவைத்து உத்தரவிட்டது.

நடிகர் சந்தானத்தால் தாக்கப்பட்ட பாஜக வழக்கறிஞர் பிரேம் ஆனந்தின் உடல் நிலை குறித்தும் விளக்கம் தர காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.