டெங்கு காய்ச்சல் தொடர்பான பணிகளை ஒருங்கிணைக்க ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி

பதிவு செய்த நாள் : 12 அக்டோபர் 2017 20:16

சென்னை

டெங்கு காய்ச்சல் தொடர்பான தடுப்புப் பணிகள், சிகிச்சைப் பணிகள் ஆகியவற்றை ஒருங்கிணைக்க மாவட்டத்தோறும்ம் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியை நியமிக்க தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி ஆணை பிறப்பித்திருப்பதாக அரசின் சார்பில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

டெங்கு மற்றும் பிற காய்ச்சல்களைக் கட்டுப்படுத்துதல் குறித்து ஆய்வு செய்வதற்கான ஆலோசனை கூட்டம் முதல்வர் தலைமையில் தலைமைச்செயலகத்தில் நடைபெற்றது.

சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள், உயர் அதிகாரிகள், சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

டெங்கு கொசு உற்பத்தியாகும் பகுதிகளை தூய்மைப்படுத்த வட்டம் மற்றும் வட்டார அளவில் கண்காணிக்க சிறப்பு குழுக்கள் அமைக்க இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. தினந்தோறும் தங்கள் பகுதி பற்றிய தகவலை மாவட்ட ஆட்சித் தலைவருக்கு அனுப்ப வேண்டும். இப்பணிகளை கண்காணிக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைக்க முடிவு செய்யப்பட்டது.

சுத்தம் செய்யப்படாத பகுதிகளின் உரிமையாளர்மீது 1939ஆம் ஆண்டு சுகாதாரச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.