யு 17 உல­கக்­கோப்பை கால்­பந்து:கானா -இந்­தியா இன்று பலப்­ப­ரீட்சை

பதிவு செய்த நாள் : 12 அக்டோபர் 2017 11:52


புது­டில்லி:

பிபா நடத்­தும் 17 வய­துக்கு உட்­பட்­டோ­ருக்­கான கால்­பந்­தாட்­டப் போட்­டி­கள் இப்­போது இந்­தி­யா­வில் கொச்சி, கோவா, டில்லி, கவு­காத்தி, கோல்­கத்தா உட்­பட 6 நக­ரங்­க­ளில் நடை­பெற்று வரு­கி­றது. ஏ பிரி­வில் இடம் பெற்­றுள்ள இந்­திய அணி அக்­டோ­பர் 6ம் தேதி அமெ­ரிக்­கா­வு­டன் மோதிய ஆட்­டத்­தில் 3-–0 என்ற கோல் கணக்­கி­லும், அக்­டோ­பர் 9ம் தேதி  கொலம்­பி­யா­வு­ட­னான ஆட்­டத்­தில் 2-–1 என்ற கோல் கணக்­கி­லும் தோல்­வி­ய­டைந்­தது. எனி­னும், சர்­வ­தேச அணி­க­ளு­டன் ஒப்­பி­டும்­போது, சர்­வ­தேச கால்­பந்து களத்­தில் புதி­தாக அறி­மு­க­மா­கி­யுள்ள இந்­திய அணி­யின் ஆட்­டம், மற்ற அணி­க­ளுக்கு நெருக்­கடி கொடுக்­கும் வகை­யில் முன்­னே­றி­யுள்­ளது ரசி­கர்­க­ளின் பாராட்­டைப் பெற்­றுள்­ளது. அதி­லும், கொலம்­பி­யா­வுக்கு எதி­ரான ஆட்­டத்­தில் இந்­திய அணி பதிவு செய்த ஒரு கோல், இந்­தி­யா­வில் கால்­பந்து ரசி­கர்­க­ளி­டையே புது உற்­சா­கத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

இதே உற்­சா­கத்­து­டன் இந்­திய அணி இன்று இரவு டில்­லி­யில் நடை­பெ­ற­வுள்ள போட்­டி­யில் கானா அணியை எதிர்­கொள்­ள­வுள்­ளது. கானா அணி­யைப் பொறுத்­த­வரை, இந்­தியா அணி அதற்கு ஒரு பெரிய விஷ­யமே அல்ல. ஆனால், கடந்த 2 போட்­டி­க­ளி­லும் இந்­திய அணி­யின் ஆட்­டத்தை கூர்ந்து கவ­னித்து வரும் கானா அணி­யி­னர், இந்­தி­யாவை சமா­ளிக்க தனி­யாக வியூ­கம் வகுக்க வேண்­டிய நிலை­யில் உள்­ள­னர். அதே நேரத்­தில் இன்று நடை­பெ­றும் போட்­டி­யில், தங்­கள் அணி முதல் சர்­வ­தேச வெற்­றி­யைப் பதிவு செய்ய என்ற பேரார்­வத்­து­டன் இந்­திய வீரர்­கள் களம் இறங்­க­வுள்­ள­னர்.

வறுமை...வறுமை...வறுமை

யு 17 கால்­பந்து உல­கக்­கோப்பை போட்­டி­கள்,  இந்­திய இளம் கால்­பந்து வீரர்­க­ளின் வாழ்க்கை முறை­யி­லும் சிறிய மாற்­றத்தை ஏற்­ப­டுத்­தும் என்று கால்­பந்து வட்­டா­ரங்­க­ளில் பேசப்­ப­டு­கி­றது. இப்­போது இந்­தி­யா­வில் உள்ள  17 கால்­பந்து வீரர்­க­ளுக்கு மாதம் தோறும் ஆயி­ரத்து 500 முதல் 20 ஆயி­ரம் ரூபாய் வரை உத­வித்­தொகை வழங்­கப்­ப­டு­கி­றது. அதே­நே­ரத்­தில், இவர்­கள் சுற்­றுப் பய­ணம் மேற் கொள்­ளும்­போது 15 ஆயி­ரம் முதல் 17 ஆயி­ரம் ரூபாய்­வரை இவர்­க­ளது குடும்­பத்­துக்கு உத­வித் தொகையை அகில இந்­திய கால்­பந்து கூட்­ட­மைப்பு வழங்­கு­கி­றது. இந்­நி­லை­யில், யு 17 அணி­யில் உள்ள வீரர்­க­ளுக்கு இந்­தி­யா­வில் உள்ள பல மாநில அர­சு­கள் ரொக்­கப்­ப­ரி­சு­களை அறி­வித்­துள்­ளன. இது இந்த வீரர்­க­ளது குடும்ப வறு­மையை போக்­கும் என்று கூறப்­ப­டு­கி­றது.

உண்­மை­யில் இப்­போது அணி­யில் உள்ள வீரர்­க­ளின் குடும்­பத்­தி­னர் கடும் வறு­மை­யில் உள்­ள­னர். வறு­மை­யி­லும் கூட தேசத்­துக்­காக விளை­யா­டப்­போ­கும் தங­கள் மக­னுக்­கான நிதி உத­வி­யை­யும் தொடர்ந்து மேற் கொண்­டுள்­ள­னர். இந்­திய அணி­யின் மிட்­பீல்­டர் ரஹீ­மின் தந்தை ரபி அலி கோல்­கத்­தா­வின் தெருக்­க­ளில் சரக்கு வண்டி இழுக்­கி­றார். ‘அவன் உல­கக்­கோப்பை போட்­டிக்கு செல்­லும் சில நாட்­க­ளுக்கு முன்­னர் வரை அவ­னுக்­குத் தேவை­யான பணம், உடையை அனுப்­பிக் கொண்­டி­ருந்­தோம். ஆனால், இப்­போது நாங்­கள் கொஞ்­சம் பெரு­மை­யு­டன் உள்­ளோம். திடீ­ரென ஒரே நாளில் எல்­லாம் மாறி­வி­டாது. அவ­னுக்­கான செல­வு­களை அரசே மேற் கொண்­டால் மட்­டுமே, பொரு­ளா­தார ரீதி­யாக மீண்டு வர முடி­யும். அணி­யில் நிறைய பெற்­றோர்­க­ளின் நிலை­யும் இது­தான்’ என்­றார்.

இந்த இக்­கட்­டான கேள்­விக்கு பதில் கூறிய அகில இந்­திய கால்­பந்து கூட்­ட­மைப்­பின் துணைத் தலை­வர்  சுபத்ரா தத்தா, ‘இப்­போது யு 17 போட்­டி­க­ளில் விளை­யா­டும் வீரர்­களை, நாங்­கள் கடந்த 3 ஆண்­டு­க­ளாக உணவு, உறை­வி­டம் கொடுத்து பாது­காத்து வந்­தோம்.  இப்­போது ஐ லீக் கால்­பந்து போட்­டி­க­ளி­லும் விளை­யாட வாய்ப்­பு­கள் வழங்­கி­யுள்­ளோம். இத­னால், இவர்­க­ளது பொரு­ளா­தார நிலைமை மெல்ல மெல்ல மேம்­ப­டும்’ என்­றார்.

ஐ -லீக் கால்­பந்து போட்டி அமைப்­பின் நிர்­வா­கி­கள் இது­கு­றித்து பேசும்­போது, இப்­போ­தைய அணி­யில் உள்ள ரஹிம் அலி, அனி­கெட் ஜாதவ் உட்­பட பல­ரை­யும் நாங்­கள் விளை­யாட வைப்­ப­தில் ஆர்­வ­மாக உள்­ளோம். நிச்­ச­யம் பொரு­ளா­தார ரீதி­யாக நம் வீரர்­க­ளின் நிலைமை மேம்­ப­டும்’ என்­ற­னர்.