ஆஸி., அணி பஸ் மீது கல்­வீச்சு

பதிவு செய்த நாள் : 12 அக்டோபர் 2017 11:28


சிட்னி:

இந்­தியா -– ஆஸி., அணி­க­ளுக்கு இடை­யே­யான 3 டி20 போட்­டி­கள் கொண்ட தொட­ரின் 2வது டி20 போட்டி கவு­காத்­தி­யில் நடை­பெற்­றது. இந்­தப் போட்­டி­யில் முத­லில் பேட்­டிங் செய்த இந்­தியா 118 ரன்­கள் எடுத்­தது. தொடர்ந்து விளை­யா­டிய ஆஸி., அணி 15.3 ஓவர்­க­ளில் 2 விக்­கெட் இழப்­புக்கு 122 ரன் எடுத்து வெற்­றி­பெற்­றது. ஆஸி., அணி­யின் ஹென்­ரி­கி­யுஸ் 62, டிரா­விஸ் ஹெட் 48 ரன்­கள் எடுத்­த­னர்.

இந்­நி­லை­யில், கவு­காத்தி மைதா­னத்­தில் இருந்து தாங்­கள் தங்­கி­யுள்ள ஓட்­ட­லுக்கு ஆஸி., அணி­யி­னர் பஸ்­சில் திரும்­பிக் கொண்­டி­ருந்­த­னர். அப்­போது மர்ம நபர்­கள் பஸ் மீது சிறிய கல்லை வீசி­ய­தாக கூற ப்­ப­டு­கி­றது. இதில் பஸ்­ஸின் கண்­ணாடி நொறுங்­கி­யது. ஆஸி., வீரர்­கள் யாருக்­கும் காயம் ஏற்­ப­ட­வில்லை. கல் வீச்­சில் கண்­ணாடி நொறுங்­கி­யதை, ஆரோன் பிஞ்ச் படம் பிடித்து தன் டுவிட்­டர் பக்­கத்­தில் பதி­விட்­டுள்­ளார். பஸ் மீது வீசப்­பட்ட கல் ஒரு கிரிக்­கெட் பந்து அள­வி­லா­னது என்று ஆஸி., கிரிக்­கெட் நிர்­வா­கம் தெரி­வித்­துள்­ளது. இது­கு­றித்து உள்­ளூர் போலீ­சார் வழக்­குப்­ப­திவு செய்து, கல்­வீ­சிய மர்ம நபர்­க­ளைத் தேடி வரு­கின்­ற­னர்.

ஆஸி., அணி­யின் பஸ் மீது கல்­வீ­சிய சம்­ப­வத்­துக்கு இந்­திய அணி­யின் ஆல் ரவுண்­டர் அஸ்­வின் தன் கடும் கண்­ட­னங்­களை பதிவு செய்­துள்­ளார். ‘இந்­தி­யா­வில் யு 17 உல­கக்­கோப்பை, ஆஸி., தொடர் ஆகி­யவை நடை­பெற்று வரும் இந்த சூழ்­நி ­லை­யில் கல்­வீச்சு சம்­ப­வம் நடை­பெற்­றுள்­ளது. இது நம் பாது­காப்பு அம்­சங்­களை மீண்­டும் ஒரு­முறை சீர்­தூக்­கி ப்­பார்த்து, அவற்­றில் உள்ள குறை­களை நீக்க வேண்­டி­ய­தின் அவ­சி­யத்தை  சுட்­டிக்­காட்­டி ­யுள்­ளது’ என்று விளை­யாட்­டு த்­துறை அமைச்­சர் ராஜ்­ய­வர்த்­தன் சிங் ரதோர் தெரி­வித்­துள்­ளார்.