உல­கக்­கோப்பை கால்­பந்து தகு­திச்­சுற்று போட்­டி­கள்: மெஸ்­ஸி­யின் ஹாட்­ரிக் கோலால் தப்­பிய அர்­ஜென்­டினா

பதிவு செய்த நாள் : 12 அக்டோபர் 2017 11:27கியூடோ,

பிபா நடத்­தும் உல­கக்­கோப்பை கால்­பந்­தாட்­டப் போட்­டி­கள் அடுத்த ஆண்டு  ரஷ்­யா­வில் நடை­பெ­ற­வுள்­ளது. இதற்­கான தகு­திச் சுற்­றுப் போட்­டி­கள் உல­கின் 6 கண்­டங்­க­ளில் நடை­பெற்று வரு­கின்­றன. ஆப்­பி­ரிக்க கண்­டத்­தில் இருந்து எகிப்து, நைஜீ­ரி­யா­வும், ஆசி­யக் கண்­டத்­தில் இருந்து ஈரான், ஜப்­பான், கொரியா, சவுதி நாடு­க­ளும், ஐரோப்­பா­வில் இருந்து பெல்­ஜி­யம், இங்­கி­லாந்து, பிரான்ஸ், ஜெர்­மன், ஐஸ்­லாந்து, போலந்து, போர்ச்­சுக்­கல், ரஷ்யா, செர்­பியா மற்­றும் ஸ்பெயின் நாடு­க­ளும் இது­வரை தகுதி பெற்­றுள்­ளன. அதே­போல் தென் அமெ­ரிக்க கண்­டத்­தில் உள்ள பிரே­சில், கொலம்­பியா உரு­குவே ஆகிய நாடு­கள் தகு­திப்­பட்­டி­ய­லில் இருக்க, 2 முறை உலக சாம்­பி­யன் பட்­டம் வென்ற அர்­ஜென்­டினா 6ம் இடத்­தில் சிக்­கிக் கொண்­டது.

ஈக்­வெ­டா­ரு­ட­னான போட்­டி­யில் அதிக கோல் வித்­தி­யா­சத்­தில் வெற்­றி­பெற்­றால் மட்­டுமே அர்­ஜென்­டினா உல­கக்­கோப்­பைப் பற்றி நினைக்க முடி­யும், இந்த ஆண்டு மெஸ்­ஸி­யின் ஆட்­டம் உல­கக்­கோப்­பை­யில் இருக்­காது என்று பல­ரும் ஆரு­டம் கூறி­வந்­த­னர். இத­னால், ஈக்­வெ­டாரை வீழ்த்­தி­யாக வேண்­டிய நெருக்­க­டிக்கு அர்­ஜென்­டினா தள்­ளப்­பட்­டது. பர­ப­ரப்­பான இந்த ஆட்­டம் ஈக்­வெ­டா­ரில் உள்ள கியூடோ நகர் மைதா­னத்­தில் தொடங்­கி­யது. ஆட்­டத்­தின் முதல் நிமி­டத்­தி­லேயே ஈக்­வெ­டார் அணி­யின் இபாரா முதல் கோல் அடித்து, அர்­ஜென்­டி­னா­வுக்கு அதிர்ச்சி வைத்­தி­யம் கொடுத்­தார்.

மெஸ்ஸி உட்­பட அர்­ஜென்­டினா வீரர்­கள் கடும் அதிர்ச்­சி­ய­டைந்­த­னர். எனி­னும், நிலை­மையை சமா­ளித்து, மெஸ்ஸி தன் துரித ஆட்­டத்தை வெளிப்­ப­டுத்­தி­னார். மெஸ்­ஸிக்கு சக வீரர்­கள் நன்கு ஒத்­து­ழைப்பு வழங்­கி­னர். இத­னால் ஆட்­டத்­தின் 11வது நிமி­டத்­தில் மெஸ்ஸி முதல் கோலை அடித்து, 1-1 என்று கோல் எண்­ணிக்­கையை சமன் செய்­தார். தொடர்ந்து 18வது நிமி­டத்­தில் 2வது கோலை­யும், ஆட்­டத்­தின் 62வது நிமி­டத்­தில் 3வது கோலை­யும் மெஸ்­ஸியே விளா­சி­னார். மெஸ்­ஸி­யின் ஹாட்­ரிக் கோல், ஈக்­வெ­டார் வீரர்­களை திண­ற­டித்­து­விட்­டது. ஆட்ட நேரம் முடி­யும் வரை இரு அணி­க­ளும் கூடு­த­லாக கோல் அடிக்க முடி­ய­வில்லை. இத­னால்,   3-1 என்ற கோல் கணக்­கில் அர்­ஜென்­டினா அணி வெற்­றி­பெற்று, தன் உல­கக்­கோப்பை வாய்ப்பை உறுதி செய்து கொண்­டது. உல­கக்­கோப்பை வாய்ப்பை பெற்­றதை நினைத்து, மைதா­னத்­தில் இருந்த மெஸ்­ஸி­யின் ரசி­கர்­கள் ஆனந்­தக் கூத்­தா­டி­னர்.

* செயின்ட் டெனிஸ் நக­ரில் பிரான்ஸ் - பெலா­ரஸ் அணி­க­ளுக்கு இடையே நடை­பெற்ற போட்­டி­யில் பிரான்ஸ் அணி 2-1 என்ற கோல் கணக்­கில் வெற்­றி­பெற்று, உலக கோப்­பைக்­குள் நுழைந்­தது. இந்த அணி­யின் அன்­டோனி கிரிஸ்­மான் அணி­யின் வெற்­றிக்கு கார­ண­மான  கோலை விளா­சி­னார்.

* போர்ச்­சுக்­கல் தலை­ந­கர் லிஸ்­ப­னில் நடை­பெற்ற தகு­திச்­சுற்று போட்­டி­யொன்­றில், போர்ச்­சுக்­கல் மற்­றும் சுவிட்­சர்­லாந்து அணி­கள் மோதின. இதில் போர்ச்­சுக்­கல் 2-0 என்ற கோல் கணக்­கில் சுவிட்­சர்­லாந்தை தோற்­க­டித்து, தன் உல­கக்­கோப்பை வாய்ப்பை உறுதி செய்­தது.