இன்டெல் இந்தியா கணினி உற்பத்தியாளர்களுடன் இணைந்து ஜிஎஸ்டி மென்பொருளை அமல் படுத்த திட்டம்

பதிவு செய்த நாள் : 12 அக்டோபர் 2017 03:21

ஐதராபாத்:

இன்டெல் இந்தியா பல்வேறு கணினி உற்பத்தியாளர்கள் மற்றும் பிற பங்குதாரர்களுடன் இணைந்து நாடு முழுவதும் உள்ள உள்ளூர் வணிகங்களுக்கும் ஜிஎஸ்டி மென்பொருளை செயல் படுத்தும் வகையில் கொண்டு வர இன்டெல் இந்தியா திட்டமிட்டுள்ளன.

சிறு, குறு தொழில், நடுத்தர நிறுவனங்கள், ஜி.எஸ்.டி., வரி படிவங்களை எளிமையாக ஜிஎஸ்டி மென்பொருள் மூலம் தாக்கல் செய்யும் வகையில் அமைய வேண்டும என இன்டெல் இந்தியா நிறுவனத்தின் மூத்த இயக்குநர் ஜிதேந்திர சாதா, கூறியுள்ளார்.
கடந்த மூன்று மாதங்களில் ஜி.எஸ்.டி., வரி படிவங்களை 22 கோடி விலைப்பட்டியலை பதிவேற்றம் செய்துள்ளனர். மேலும் சிறு, குறு தொழில், நடுத்தர நிறுவனங்களும் ஜிஎஸ்டி மென்பொருளை பயன்படுத்த தொடங்கினால் இதன் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரிக்கும் என்று ஜிதேந்திர சாதா தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்தை செயல் படுத்தும் வகையில் இன்டெல் இந்தியா ஏசர், டெல், லெனோவா உள்ளிட்ட ஹெவ்லெட்-பேக்கர்டு, ஐபால் மற்றும் ஃபாரஸ்ட் ஆகிய நிறுவன்ங்களுடன் இனணந்து எளிதாக  ஜிஎஸ்டி மென்பொருளை செயல் படுத்தும் வகையில் கொண்டு வர இன்டெல் இந்தியா திட்டமிட்டுள்ளன.