நடால் பெரிய ஆளுதான் புகழ்ந்து தள்ளிய பெடரர்

பதிவு செய்த நாள் : 11 அக்டோபர் 2017 09:30


ஷாங்­காய்:

 சீனா­வின் ஷாங்­காய் நக­ரில் நடை­பெற்று வரும் ஷாங்­காய் ரோலக்ஸ் மாஸ்­டர்ஸ் டென்­னிஸ் போட்­டி­யில், கலந்து கொள்­வ­தற்­காக ஷாங்­காய் வந்த விம்­பிள் ­டன் சாம்­பி­ய­னும், சுவிட்­சர்

­லாந்து வீர­ரு­மான ரோஜர்­பெ­ட­ரர் நிரு­பர்­க­ளி­டம் பேசி­னார். அவர் பேசும்­போது, ‘சமீப கால­மாக ராபெல் நடா­லின் ஆட்­டம் அபா­ர­மாக உள்­ளது. கடந்த வாரத்­தில் அவர் சீன ஓப்­பன் கோப்­பையை வென்­றுள்­ளார். அதே­போல் அமெ­ரிக்க ஓபன் கோப்பை, லாவர் கோப்பை என்று பல கோப்­பை­கள் வென்று, இந்த ஆண்­டின் சிறந்த வீர­ராக, நம்­பர் ஒன் இடத்­தில் உள்­ளார். உண்­மை­யில் அவர் டென்­னிஸ் களத்­தின் மன்­னன்­தான். இந்த ஆண்­டின் தொடக்­கத்­தில் அவர் ஆஸி., ஓபன் போட்­டி­யில் என்­னு­டன் விளை­யா­டி­ னார். 15 ஆண்­டு­க­ளுக்கு முன்­னர் இருந்த அதே வேகத்­து­டன் அவர் விளை­யா­டு­வ­தைப் பார்க்க முடிந்­தது. அவ­ரது ஒரே ஒரு பிரச்னை என்­ன­வென்­றால், பிரெஞ்ச் ஓபன் கோப்­பையை 10 முறை வென்­றுள்­ளார். இத­னால், மற்ற களங்­க­ளில் அவர் சிறப்­பாக விளை­யாட முடி­யாதோ? என்று ரசி­கர்­கள் நினைப்­பார்­கள். ஆனால், உண்­மை­யில் நடால் எந்த ஒரு டென்­னிஸ் களத்­தி­லும் சாதிக்­கக் கூடிய ஆள் என்­பதை இந்த ஆண்­டில் நிரூ­பித்­துள்­ளார்’ என்­றார்.